Thiruppugal Swamigal(Valli Malai)

வள்ளிமலையில் திருப்புகழ் சுவாமி ( சச்சிதனந்தா)  தனது குருநாதரான  சேஷாத்ரி சுவாமிகள் ஆணைப்படி ஆசிரமம் அமைத்து முருக வுபாசனை  செய்து வந்தார்.அவர் 40 வயது  வரை  படிக்காம லிருந்தவர்.திருவாவினன்குடி (  3 ஆவது படைவீடு )அருகில் மலைமேல் வுள்ள பழநி மலை முருகனை ,கடும் வயிற்று வலியினால் பாதிக்கப்பட்டு அவருக்கு தெரிந்தவர்கள்,பழநி முருகன் அபிஷேகப் பாலைப் பருகினால் குணமாகும் என்று கூறக் கேட்டு தரிசிக்க வந்தார்.அவர் இரு திருமணங்கள் செய்து கொண்டவர்.அதில் ஒரு மனைவி மற்றும் சில பிள்ளைகள் இறந்து  விட்டனர். இவரும் மீளாத  வயிற்று வலியினால் மிகவும் மெலிந்து தான்  வுயிர்  பிழைப்பதே கடினம் என்ற நிலையில் இன்னொரு மனைவியுடன் பழநி வந்து தங்கி முருகனுக்கு அபிஷேகம் செய்த பாலை மட்டும் பருகி வந்தார்.சிறிது காலத்தில்  முருகனது  அருளால் அவரது நோய் முற்றிலும் நீங்கியது. அது முதல் முருகப்பிரானுக்கு சேவை செய்ய  வேண்டும் என்ற பேரவா அவருள் எழுந்தது. அப்பொழுது ஒரு பெண்மணி பாடலுடன் முருகன் சந்நிதியில் அபிநயத்துடன் ஆடுவதைக் கண்டார்.படிக்கதவரான அவருக்கு    அது என்ன  பாடல்  என்று தெரியவில்லை.அருகில் இருந்தவர்களிடம் விசாரித்ததில்  அது  "திருப்புகழ்" என்றும் முருகனின் பெருமையைச் சிறப்பித்துப்  பாடுவது  என்றும் கூறினர்.அந்த பாடலைக் கேட்டவுடன் அவர் கண்ணிலிருந்து  தாரை  தாரையாக கண்ணீர்  வந்தது.அந்த பாடல் திருசெங்காட்டங்குடி என்ற தலத்தில் அருணகிரிநாதரால் பாடப்பட்ட திருப்புகழ்." சிங்கார ரூப மயில் வாகன நமோ நமன ,கந்தா குமார "" சிவ தேசிக நமோ நமன "என்ற அடிகள்தான் சுவாமிகளின் வாழ்க்கையையே முற்றிலும் மாற்றியது. அது முதல் தமிழ் மொழியைக் கற்கலானார்.பழநியிலிருந்து மேற்கு மலைத் தொடர் வழியாக பலமுறைக் காட்டுப்பாதை வழியாகத்  தன்னந்  தனியே நடந்து சென்று குற்றால அருவியிலிருந்து அபிஷேக நீரைக் குடத்தில் தலையில் சுமந்து வந்து கொடுத்தார்.திருப்புகழைச் சிறிது சிறிதாகப்  படிக்கலானர். அதன் பிறகு அருணகிரி அவதரித்தத் தலமான திருவண்ணாமலை வந்தடைந்தார்.திரு.சேஷாத்ரி சுவாமிகளையும் , திரு.ரமண  பகவானையும்  சந்தித்தார்.அங்கு  தங்கியிருந்த போது அவரிடம்  திருப்புகழ் கேட்ட சேஷாத்ரி சுவாமிகள்" எனது யானும் வேறாகி எவரும் யாதும் தானாகும்  இதய  பாவனதீதம் அருள்வாயே "என்ற திருப்புகழ் அடிகளையே அவருக்கு வுபதேச மந்திரமாக வுபதேசித்து சுவாமிகளை வள்ளிமலைக்குச் செல்லுமாறு  கூறினார்.சுவாமிகள்  பெரியவர்கள் இருவரையும் பிரிந்து செல்ல தயங்கியபோது ,சேஷாத்ரி சுவாமிகள் தான் அங்கு வந்து அவருக்கு தரிசனம் கொடுப்பதாகக் கூறியதால் வள்ளிமலைக்குச்  சென்று தங்கினார்,அருணகிரிநாதர் தமது திருப்புகழில்  பூமியின் மேல் மூன்று இடத்தின் மேல் முருகனின் பாதம் பட்டது என்பார். ஒன்று அவர் தலைமேல்.மற்றொன்று வள்ளிமலையிலும் ,இன்னுமொன்று திருவிடைக்கழி (திருக்கடையூர்  அருகில்) என்னும் தலத்திலும் ஆம்.                                                                                                                                வள்ளிமலையில் அவர்   தம்பூரா மீட்டிப்  பாட முயலும்போது வள்ளியின் ''தோழியாகிய "பொங்கி " என்னும் பெண்மணி அவரது காதில் என்ன  இராகம்,தாளத்தில் எந்தெந்த திருப்புகழை  எப்படி பாடவேண்டும் என்பதைக் கூறியதாகக்  கூறுவர்.சுவாமிகள் திருப்புகழ்  பாடும் முறையைத் தொகுத்துத் தமிழகம் முழுவதும் திருப்புகழ்  பாடி பக்தி நெறியைப் பரப்பினார்.ஆங்கில வருட  முதல்  தேதியன்று  வெள்ளைக்  காரர்களை  சென்று பாற்பதைவிட திருத்தணி முருகனாம் தமிழ்க்  கடவுளை தரிசியுங்கள் .அவன்  நமக்கு எல்லா  நலன்களையும் அளிப்பான் என்று  செய்து காட்டியவர் ,இன்றும்  சென்னையிலிருந்து  டிசம்பர்  31ம் தேதி இரவில் திருத்தணி முருகன் கோயிலுக்கு  தனி  ரயில் செல்கிறது.ஆன்மீக புனித பயணக்கட்டுரை ( ஆனந்தவிகடன்) எழுதிய  திரு. பரணீதரன்  அவர்கள் வள்ளிமலையைப்  பற்றி    சிறப்பித்து   கூறியுள்ளார்.சில வருடங்களுக்கு முன்  கோயில் சீரமைப்பு  வேலை நடை  பெற்ற போது  மலைப்படியை  சரி செய்யும்போது  கடப்பாரையால்  வேலை ஆட்கள்  படியைத்  தூக்கியுள்ளார்கள். அது  சமயம் படியின்  வுட்புறம்  பத்மாசன   நிலையில் ஒருவர்  தவக்கோலத்தில்  இருந்ததைக் கண்டவர்கள் அங்கு திருப்பணி செய்த பெரியவர்களிடம் தெரிவிக்க சாம்பிராணி புகையுடன் தென்பட்ட  யோகியை நிஷ்டை  கலைக்க  வேண்டாம் என்று  அப்படியே  படியுடன் மூடிவிட்டதாகக்  குறிப்பிட்டுள்ளார்.இன்றும் திருவண்ணாமலை , பர்வதமலை,கஞ்சமலை(சேலம்),சதுரகிரிபோன்ற  இடங்களில் சித்தர்கள்  கண்  மறைவாய்  வுறைகிறார்கள்.                                                                                                

Comments