Dakshinamurthy Stotram | Dakshinamurthy Mantra 18

                                                   श्री दक्षिणामूर्ती  स्तोत्रम  18


उपासकानां  त्वउमासहाय पूर्णेन्दुभावं  प्रकटीकरोषि | यदध्य  ते   दर्शनमात्रतो मे  द्रवत्यहो मानस चन्द्रकान्त : ||
உபாஸகாநாம் த்வமுமாசஹாய   பூர்ணேந்துபாவம்  ப்ரகடீகரோஷி |
யதத்ய தே தர்ஸந  மாத்ரதோ மே  த்ரவத்யஹோ   மாநஸ சந்த்ரகாந்த: ||    

त्वं - நீர், उपासकानां - தன்னை உபாஸிக்கின்றவர்களுக்கு, उमासहाय - பரமேச்வரியுடன் கூடியவராய் ,पूर्णेन्दुभावं - பூர்ணமான  சந்திரனுடைய  தன்மையை, प्रकटीकरोषि - வெளிப்படுத்துகின்றீர் .यद् -எதனால் अध्य - இன்று
ते   दर्शनमात्रत - உம்மைக்கண்ட  மாத்திரத்திலேயே, मे - என்னுடைய मानस चन्द्रकान्त - மனமாகிய சந்திரகாந்தக்கல், द्रवति - உருகுகிறது. अहो - ஆச்சர்யம் !

இந்த சுலோகத்தில் பகவத்பாதர்  ஸ்வானுபவத்தை  வர்ணிக்கின்றார் .  தன்னை  உபாஸிக்கின்றவர்களுடைய  அகக்கண் முன்  பரமேச்வரன் அம்பிகையுடன் கூடியவராய்க் காட்சியளிக்கின்றார். அவர் பூர்ண  சந்திரனைப் போன்றவர். பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் தன்மை வாய்ந்தவர். அவரைக்  கண்ட மாத்திரத்தில் பகவத் பாதர் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றார்.அதை அவர் ஓர் உருவகத்தின் மூலமாக  எடுத்துக்காட்டுகின்றார். அவருடைய மனதுதான்  சந்திரகாந்தக்கல் .பரமேச்வரனுடைய  தோற்றமே சந்திர பிம்பம். ஆதலால் சந்திர பிம்பத்தைக்கண்டு  சந்திரகாந்தக்கல் உருகுவதுபோல் பரமேச்வரனுடைய  ஸ்வரூபத்தைக்கண்டு ஆச்சார்யபாதரின் உள்ளமும்  உருகி  விடுகிறது . 



       Thiruveezhimizhalai Kalyanasundarar.Photo courtesy-Dinamalar News Magazine.



Comments