Dakshinamurthy stotram | Dakshinamurthy mantra 19



यस्ते  प्रसन्नामनुसंदधानो   मूर्तिं  मुदा  मुग्त शशाशङ्क मौले : |  ऐस्चर्यमायुर्लभते च  विध्यामन्ते   च  वेदान्त  महारहस्यम् ||

யஸ்தே   ப்ரசந்நா மநு  ஸந்ததாநோ மூர்த்திம் முதா முக்த  ஸஸாங்க  மௌளே : |   ஐஸ்வர்யமாயூர்  லபதே ச வித்யாம் அந்தே ச  வேதாந்த  மஹா ரஹஸ்யம் ||  

य : எவன் ஒருவன், मुग्त शशाशङ्क मौले  அழகிய மதியை முடியில் தரித்திருக்கும்,  ते - உம்முடைய , प्रसन्नां - மகிழ்ச்சியுடைய मूर्तिं - உருவத்தை , मुदा - சந்தோஷத்துடன்ககூட, अनुसंदधान  - த்யானம் செய்துகொண்டிருக்கிறானோ , स: அவன் ऐस्वर्यै - செல்வத்தையும்,  आयु - நீண்ட ஆயுளையும்,विध्यां - கல்வியையும் ,अन्ते - கடைசியில் , वेदान्त  महारहस्यम् च - வேதாந்தத்தின் சிறந்த ரஹஸ்யத்தையும் ,लभते - பெறுகிறான். 

பரமேச்வரன் தன் ஜடையில் அழகிய சந்திரகலையை அணிந்து கொண்டிருக்கின்றான்.அவன்  ஆனந்தமயமாகக் காணப்படுகின்றான். இவ்வாறு நித்யானந்த ரூபியாகத்  தோன்றும் பரமேச்வரனை எவன் ஒருவன் அனவரதமும் அனுசந்தானம் செய்கின்றானோ ,அவன் சகல விதமான நன்மைகளையும் அடைகிறான். அவன் அளவற்ற செல்வத்தையும்,நீண்ட ஆயுளையும், சிறந்த அறிவையும்  பெறுகின்றான் .கடைசியாக மோக்ஷ சாம்ராஜ்யத்தை அளிக்க வல்ல வேதாந்த ரகஸ்யங்களையும் அறிந்து  கொள்கிறான் .ஆனந்தமயமான  ஸவரூபத்தை தியானம்செய்தலால் இவனும் ஆனந்தரூபியாகவே  
ஆகிவிடுகின்றான் .

     इति श्री दक्षिणामूर्ति स्तोत्रं  संपूर्णम् .ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் முற்றிற்று . 

,




Comments