Shiva Bhujangam slokam 3


स्वशक्यादि  शक्यन्त्त सिंहासनस्थं , मनोहारि सर्वाङ्ग   रत्नोरुभूषम्

जटाही नदु गङ्गास्थि शम्याक मौलिं  पराशक्तिमित्रं नुम: पञ्च वक्त्रम्  ||



ஸ்வஸக் த் யாதி  ஸக்த்ய  ஸிம்ஹாநஸ்தம்

மநோ ஹாரி ஸர்வாங்கர  த்நோருபூஷம் |

ஜடாஹீந்து கங்காஸ்தி  ஸம்யாக   மௌளிம்

பரா ஸக்திமித்ரம்  நும : பஞ்சவக்த்ரம்||

स्वशक्यादि= தன் சக்தியையே முதலாகக்கொண்டதும்  स्वशक्यन्त=          தன் சக்தியையே கடைசியாக
உடையதுமான ஸிம்மாஸனத்தில் வீற்றிருப்பவனும்,मनोहारिसर्वाङ्ग =மனதைக்
கவருகின்ற எல்லா அங்கங்களிலும் रत्नोरुभूषम्=ரத்னங்களிழைத்த பெரிய
அணிகளை  யுடையவனும் जटा = ஜடை  अहि = பாம்பு इन्दु  =சந்திரன்  गङ्गा   =கங்கை अस्थि = எலும்பு शम्याक = கொன்றை மலர் இவைகளைத் தாங்கும்
मौलिं = தலையையுடையவனும் पराशक्तिमित्रं=பராசக்தியின் துணைவனும்
पञ्च वक्त्रम्=ஐந்து முகங்களையுடையவனுமான  பரமேச்வரனை नुम =வணங்குகிறோம் .

பரமேச்வரன் ஸாட்சாத்  பர தேவதையின்  துணைவன்.  ஆகையால் அவளுடன் அவன் சக்தி பீடங்கள் எல்லாவற்றிலும் அமர்ந்திருக்கிறான்
அவனுடைய எல்லா அங்கங்களும் ரத்னங்கள் இழைத்த அழகிய நகைகளால்
அலங்கரிக்கப் பட்டுள்ளன .அவனுக்கு மற்ற  தேவர்களிடம்இல்லாத தனிச் சிறப்பு  ஏற்பட்டுள்ளது. அவனது ஐந்து முகங்களும் தேஜோ மயமாய்
விளங்குகின்றன .அவரது சிரஸில் ஜடை,சந்திரன் , கங்கை ,பாம்பு ,கொன்றை மலர்கள் முதலியன விளங்குகின்றன .இவ்வாறு பராசக்தி
ஸமேதனாய், ஸர்வாலங்கார பூஷிதனாய் ஐந்து முகங்களுடனும்
ஸிம்மாஸனத்தில் வீற்றிருந்து உலகனைத்தையும் ஆளும் உத்தமனாய்
விளங்கும் உமா மஹேச்வரனை நாம் வணங்குகிறோம்.


 Photo  with thanks to Somasundaram Shunmugam  & also to Sri Murugaiyan Thangavel for sharing.





Comments