Shiva bhujangam slokam 9



           
                   महादेव  देवेश  देवादिदेव  स्मरारे  पुरारे  यमारे  हरेति  ।

             ब्रुवाणः  स्मरिष्यामि  भक्त्या  भवनतं  ततो मे दयाशील देव प्रसीद ॥ 

   
                      மஹாதேவ தேவேஸ  தேவாதி  தேவ    

                           ஸ்மராரே  புராரே யமாரே  ஹரேதி | 
               
                       ப்ருவாண: ஸ்மரிஷ்யாமி   பக்த்யா பவந்தம்   
             
                             ததோ  மே  தயாசீல  தேவ  ப்ரஸீத || 


   महादेव = மஹாதேவனே  देवेश = தேவர்களுக்குத்  தலைவனே देवादिदेव = 

தேவர்களுக்கெல்லாம் முதல் தேவரே स्मरारे =மன்மதனை  எரித்தவனே 

पुरारे = புரன்  என்ற அரக்கனை மாய்த்தவனே यमारे =யமனை 


அடக்கியவனே हर = பரமேஸ்வரனே इति = என்று  சொல்லிக்கொண்டு 

भक्त्या =பக்தியுடன் உம்மை  स्मरिष्यामि =த்யானம்  செய்கிறேன்        तत :  

ஆகையால்  दयाशील = ஹே  கருணா ஸ்வரூபியே देव = தேவனே मे = எனக்கு 

प्रसीद = அருள் புரிவாயாக .


பரமேச்வரனுடைய  பெருமைகள் இங்கு எடுத்து சொல்லப் படுகின்றது .

பலம் மிகுந்த தாராகா சூரனால் தேவர்களுக்கு இன்னல் வந்த போது 

தேவேந்திரன் ,பிரம்மாவிடம்  சென்று  கேட்ட போது சிவன் மட்டுமே 

அவர்களைக்  காப்பாற்ற முடியும் என்று கூறினார். தியானத்திலிருந்த 

சிவபிரான் மீது     ,  மன்மதனை விட்டு  மலரம்பு  பாணத்தை ஏவச் செய்தான் .

அப்பொழுது  சிவனின் அருகில் அன்னை பார்வதி தேவியும் இருந்தாள். 

தியானம் கலைந்த சிவபிரான் மன்மதனைக் கண்டதும் அவன் மீது 

சினந்து நெற்றிக் கண்ணைத் திறந்தார் .மன்மதன் எரிந்து 

சாம்பலானான். ( திரு  முருகனுடைய  அவதாரம் - மற்றும் தாரகனை 

வதம் செய்தது ).மற்றும் ஒரு சமயம் திரிபுரன் என்ற அரக்கன் தங்கம், 

வெள்ளி , இரும்பால் ஆன மூன்று கோட்டைகளைக்  ( பறந்து செல்வன )

கொண்டு எல்லா உலகங்களுக்கும் தீங்கு செய்தான் . அவனை நோக்கி 

சிரித்தே , அழித்து விட்டார் .( முப்புரம் எரி செய்த அச்சிவன் - கைத்தல 

  நிறை கனி   என்ற  திருப்புகழ் ).தன் பக்தனான மார்கண்டேயனைக் 

காப்பாற்ற , காலனையே  காலால் உதைத்து சம்ஹாரம் செய்தவன். 

இவ்வாறாக    பரமேச்வரனுடைய    பெருமைகளை    மனதில்  

ஸ்மரித்துக்  கொண்டு அவரது  திருநாமங்களை  யார்  பக்தியுடன் 

கூறுகின்றார்களோ , அவர்களுக்கு  கருணாமூர்த்தியான அவர் பரிவு 

காட்டி அவர்களை எல்லாவித ஆபத்துகளிலிருந்தும்  காப்பாற்றுகிறார் .



Sri Bhaktajaneswarar                                                                  Goddess  Manonmani     
  

Thirunavalur  Shiva temple
  
    Vilupuram  Dt

 12 kms from Panruti towards Ulundurpet route

Birth place of Sri Sundaramoorthy Nayanar

Photo courtesy :Dinamalar magazine


Comments