Shiva bhujangam slokam 13



         
                 न  शक्रोमि   कर्तुं  परद्रोहलेशं  कथं प्रीयसे  त्वं न जाने गिरीश

                 तथा हि  प्रसन्नो  सि कस्यापि  कांतासुत द्रोहिणो वा पितृद्रोहिणो वा ॥


             ந  ஸக்னோமி  கர்த்தும்  பரத்ரோஹலேஸம்

                   கதம் ப்ரீயஸே  த்வம்  ந   ஜாநே  கிரீஸ |

             ததா  ஹி ப்ரஸந்நோ ஸி கஸ்யாபி    காந்தா-

                   ஸுததத்ரோஹிணோ   வா பித்ருத்ரோஹிணோ  வா | 

     
        गिरीश = சிவபெருமானே  परद्रोहलेशं = பிறருக்குச் சிறிதளவு  துரோஹத்தைக்

கூட  कर्तुं = செய்வதற்கு न  शक्रोमि= நான் சக்தியுள்ளவனாக இல்லை . त्वं = நீர்

कथं = எவ்வாறு  प्रीयसे = என்னிடத்தில் பிரியமுள்ளவராக இருப்பீர்  என்று


न जाने= நான் அறிந்து கொள்ள வில்லை .  तथा हि = அது எப்படியெனில்

कस्यापि = ஏதோ ஒரு  कांतासुत द्रोहिणो =மனைவிக்கும்  மக்களுக்கும் துரோஹம்

செய்வதனிடமும்  प्रसन्नो  सि  = அனுக்ரஹம் செய்வதனாக இருக்கிறீர் .


     முன் சுலோகத்தில்  பரமேசுவரன்  நற்குணம்  இல்லாவதனுக்கும்

அனுக்ரஹம் செய்கிறார்   என்று  கூறப்பட்டது. இங்கு பெரிய தோஷம்

உள்ளவனையும்  கை தூக்கி  விடுகிறார்  என்று காட்டப் படுகிறது .

அதாவது  மனைவிக்கும், மக்களுக்கும் , தந்தைக்கும் துரோஹம் செய்த

மஹாபாபியிடமும்   ஈஸ்வரன் கருணைகாட்டி அருள் பாலிக்கிறார் . தன்

தந்தையின் காலை வெட்டிய சண்டேசுவரரும் , தன் பிள்ளையைக்

கொன்று  சமைத்த சிறுத்தொண்ட நாயனாரும் தன் மனைவிக்குத்

துன்பம் விளைவித்த கலிக்கம்ப நாயனார் ,கழற்சிங்க நாயனார்

முதலானோரும்  சிவனுடைய அருளைப் பெற்றவர்களில்    சிறந்தவர்கள்.

இதையெல்லாம் கவனித்தால் பெரிய குற்றம் செய்தவன்தான்தான்

தங்கள் அருளுக்குப்  பாத்திரமாவான் என்று தெரிகிறது . இம்மாதிரியான

பெருங்குற்றம் செய்ய எனக்குத்   திறமையில்லையே .உம் அருள் எனக்கு

எவ்வாறு  கிட்டும்? என்று கேட்கிறார் .Sri.Adhi Kumbeswarar &  Goddess Mangalambigai
Kumbakonam( Tamil Nadu . This is one Skakthi Peetam.)Photo courtesy:Dinamalarnews magazine.



This is where  "Maha Maham " is celebrated -  Kumbakonam - once in 12 years as the " Kumba mela
in the north.
 .




Comments