Shiva bhujangam slokam 16



                          दरिद्रोऽस्म्यभद्रोऽस्मि भग्रोऽस्मि दूये
                   विषण्णोऽस्मि सन्नोऽस्मि खिन्नोऽस्मि चाहम् ।
                          भवान्प्राणिनामन्तरात्मासि शंभो
                       ममाधिं न वेत्सि प्रभो रक्ष मां त्वम् ॥ १६ ॥ 

           
                     தரித்ரோ(அ)ஸ்ம்யபத்ரோ(அ)ஸ்மி பக்ரோ(அ)ஸ்மி தூயே
         விஷண்ணோ(அ)ஸ்மி ஸன்னோ(அ)ஸ்மி கின்னோ(அ)ஸ்மி சாஹம்                       பவான்ப்ராணினாமந்தராத்மாஸி ஸம்போ
                       மமாதிம் ந வேத்ஸி ப்ரபோ ரக்ஷ மாம் த்வம்|
            

      ஆதிகளை  ( மனக்கிலேசங்களை)  போக்க வேண்டுகிறார் .
          
 अहम् = நான் दरिद्र = ஏழையாக अस्मि =  இருக்கிறேன். अभद्र =க்ஷேமமற்றவனாக अस्मि    இருக்கிறேன் भग्न : ஒடிந்தவனாக  
अस्मि =  இருக்கிறேன் दूये = வருத்தப்படுகிறேன் विषण्णा = வேதனை 
அடைந்தவனாக இருக்கிறேன் खिन्न : अस्मि = கிலேசத்தை  
அடைந்திருக்கிறேன் शम्बो = சிவபெருமானே भवान् प्राणिनां = எல்லா 
ஜீவ ராசிகளுடையவும் अन्तरात्मा = அந்தராத்மாவாக असि  = இருக்கின்றீர் 
मम = என்னுடைய आधिं = மனோ வியாதியை न वेत्सि = அறிய மாட்டீரா ?
प्रभो = பிரபுவே ,  நீர் मां = என்னை रक्ष = காப்பாற்றும் .

    முன் சுலோகத்தில்  சிவபெருமான்தான் நம்முடைய சரீரத்திலுண்டாகும்  வியாதிகள் அனைத்தையும் நீக்கவல்லவர் 
என்று கூறப்பட்டது . இங்கு அவர் நம்முடைய மனதில் உண்டாகும் 
ஸகல ஆதிகளையும் (   க்லேசங்களையும்) போக்கும்   வன்மை 
பெற்றவர் என்று சொல்லப் படுகின்றது . சிவபெருமான்தான் 
சிறந்த  பிரபு . அவர் எல்லோருடைய இருதயத்திலும் 
நிலைத்திருக்கும் அந்தராத்மா . ஆதலால் பிறரால் அறிந்து 
கொள்ள முடியாத நம் மனத்துன்பங்களை அவர் நன்கு 
உணர்கின்றார் . அவரைப் போற்றுங்கள்,  எல்லாத்  துன்பங்களும் 
உடனே நீங்கும்.  Photos  : Gangai konda Chozhapuram,Ariyalur,Tamil Nadu .King Rajendra Chozha built this Shiva temple  during 10th century A C.Goddess Perianayagi amman & Prahadeeswarar.Temple is similar to his father's temple at Thanjai (Rajaraja Chozha}.Photo courtesy :Dinamalar magazine.
                                                                  


 
                                           


Comments