Shiva bhujangam slokam 19



                     
                                        भवद्गौरवं मल्लघुत्वं विदित्वा
                              प्रभो रक्ष कारुण्यदृष्ट्यानुगं माम् ।
                               शिवात्मानुभावस्तुतावक्षमोऽहं
                              स्वशक्त्या कृतं मेऽपराधं क्षमस्व ॥ १९

                 பவத்கௌரவம் மல்லகுத்வம் விதித்வா
            ப்ரபோ ரக்ஷ காருண்யத்ருஷ்ட்யானுகம் மாம் | 
              ஸிவாத்மானுபாவஸ்துதாவக்ஷமோ(அ)ஹம்
             ஸ்வஸக்த்யா க்ருதம் மே(அ)பராதம் க்ஷமஸ்வ || 

          हे  प्रभो =  ஏ  பிரபுவே !                 भवद्गौरवं = உம்முடைய பெருமையையும் मल्लघुत्वं = என்னுடைய சிறுமையையும் 
विदित्वा = அறிந்து கொண்டு कारुण्यदृष्ट्या = உம்முடைய கருணா கடாக்ஷத்தினால் अनुगं  = உம்மைப் பின்பற்றும்  
ஊழியனான माम्= என்னை रक्ष  = காப்பாற்றும் अहं = நான் 
शिवात्मानु भावस्तुतौ = சிவஸ்வரூபத்தின் பெருமையை 

துதிப்பதில்  अक्षम = சக்தியற்றவன் . शक्त्या = உம்முடைய சக்தியால் मे  कृतं = என்னால் செய்யப்பட்ட  अपराधं =  குற்றத்தை  क्षमस्व = பொறுத்துக்கொள்வீராக   


  பரமேஸ்வரன் ஸர்வ  சக்தியுள்ளவன் .அளவற்ற பெருமை பெற்றவன்.
எல்லாவற்றிற்கும் எஜமானன் .நானோ மிகச் சிறியவன் . அல்ப  புத்தியுள்ளவன்.ஊழியன் ஆதலால் அவனுடைய ஸ்வரூபத்தை  
எனக்குள் பாவித்துத் துதிக்கும் ஆற்றல்  எனக்குக்  கிடையாது . இவ்வாறு 
இருப்பினும் சிறியவனாகிய நான் செய்த பிழையெல்லாம் ஸர்வ சக்தி  
வாய்ந்த பரமேச்வரன் பொறுத்துக்கொண்டு ஊழியனான என்னிடம்  
தன்னுடைய கருணாகடாக்ஷத்தைச் செலுத்திக்  காத்தருளல் வேண்டும்  
என்று பிரார்த்தனை செய்கிறார் .இம்மாதிரி செருக்கை உதறித்தள்ளி  
நாம் பகவானிடம் வேண்டிக்கொண்டால் கட்டாயம் அவர் நம்மைக் 
காப்பாற்றுவார் .



photo showing Sri Sailam jyotir lingam



Comments