Skip to main content

Apartment Kolam

Apartment kolam with dots

Puja,worship in temple & home 2.

ராஜ கோபுர வாயில்கள் 1,3,5 7,9 11 என்ற ஒற்றைப்  படை  அடிப்படையில்  அமைந்திருக்கும். இதில் அமைந்துள்ள வாயில்கள் ஒன்றன் மேல் ஒன்றாய் அதிகரித்துக் கொண்டே போகும்.இவைதத்துவத்திற்கு விளக்கமாக அமைந்துள்ளன.மூன்று வாயில்கள்,ஜாக்கிரத ,சொப்பன , சுழுப்தி  என்ற  மூன்று அவஸ்தைகளைக்  குறிப்பிடுகின்றன.                                                 ஜாக்ரத அல்லது  விழிப்பு நிலை:இந்நிலையில் ஜீவன்( individual  atma ) உலக வாழ்க்கை தொடர்புடன்,உடலைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும். மனம்  முழுவதும்  மூளையை ( brain) ஆக்கிரமித்துக் கொள்ளும்.      சொப்பன  நிலை (dream state) : ஐம்புலன்கள் அமைதியுற்று மனதுடன் ஐக்கியமாகி விடும்.மனம் மட்டும் வேலை செய்யும்.யானை ,குதிரை ,கடல் மற்றும்உலகபொருட்களைப்படைக்கும். மனம்  தானாகவும்(subject), காணப்படும்பொருளாகவும் object)இருக்கும்.seer &  seen are  one.                                                                                                                                                சுழுப்தி நிலை (deep sleep state ):இதில்   மனம்      வேலை செய்யாது.அதனால்விருப்பு,வெறுப்பு  போன்ற உணர்வுகள்  கிடையாது . மனம் அடங்கி அல்லது லயமாகி இருக்கும்.இந்த்ரியங்களும்,புலன்களும் (organs &senses )வேலை செய்யாது. தான் என்ற உணர்வு மட்டும் இருக்கும்.இந்த ஆழ்ந்த கனவற்ற  உறக்க நிலை ஞானிகளிடம் மட்டும் இருக்கும்.ஏனெனில் சாதாரண நிலையில் இருக்கும் மனிதர்கள்  உலக  ஆசைகள், தான் என்ற அகங்காரம்( அகப்பற்று, புறப்பற்று) இவற்றுடன் இருப்பதால் கனவற்ற உறக்கம்  அவர்களுக்கு வருவதில்லை.இதனையேதான் சத்குரு  சாந்தானந்த சுவாமிகள் (  சேலம் கந்தாஸ்ரமம் அதிஷ்டானம்) " ஏ  மனமே" என்ற நூலில் திருக்குறள் போன்று )இரட்டை வரிகளில்  எல்லோருக்கும்  புரியும்படி உரைநடை யாகக் கூறியுள்ளார் . அவர் அமர்ந்த நிலையில் புன்சிரிப்புடன் நம்மைப்  பார்த்து  ஆசிர்வதித்து நேரில் உபதேசம் செய்வது போன்றிருக்கும். அவர் அறிவுரைகள். அவர் அமர்ந்ந்திருக்கும் விசாலமான  மண்டபத்தின் உட் சுவரில், "  ஏ     மனமே கனவில்லாது உறங்கக் கற்றுக் கொள் "இது போன்று எளிமையான அறிவுரைகளை  எழுதி வைத்துள்ளனர்.                                                                                                                                                                                                5   வாயில்கள்  உள்ள  கோபுரம் ஐம்பொறிகளைக்  குறிக்கும் . ஏழு  வாயில்கள் ஐம்பொறிகளுடன் ,மனம் ,புத்தியையும் சேர்த்து உணர்த்தும் .ஒன்பது வாயில்கள் ,சித்தம் ,அகங்காரமஎன்றதத்துவங்களும்சேர்ந்துஒன்பது தத்துவங்களை உணர்த்தும் இத்தனை வாயில்கள் இருந்தாலும் கோயில்  உள்ளே செல்வதற்கு தரை  மட்டத்தில் உள்ள வாயிலேபயன்படும்.அகக்கரணங்கள், புறக்கரணங்கள்  போன்ற  பல  கரணங்கள்   நம்மிடமிருந்தாலும்   மனது    என்ற   ஒருகரணம்மட்டுமேநமக்குஅதிகமாகபயன்படுகிறது கடவுளைஅறிய. பஞ்சேந்த்ரியங்களையும் மனதையும்   புத்தியையும்   கொண்டு  புற  உலகங்களை  அறிகிற செயலை அப்படியே நிறுத்தி வைத்து விட்டு ,மனதைத் துணையாகக் கொண்டு கடவுளிடத்து உள்முகமாக செல்ல வேண்டும் என்ற தத்துவத்தை ராஜகோபுர வாசல் நமக்கு விளக்குகிறது. இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம் .

Comments

Post a Comment

Popular posts from this blog

Friday padi kolam with dots 7 to 1 by learn kolam

Navarathri Kolam For 9 Days - Navratri Kolam / Rangoli Designs

Navratri festival is around the corner. So I have shared 9 simple Navarathri kolam designs for 9 days. I have given kolam with dots & without dots. I hope these kolam ideas would be useful for beginners. You can draw these rangoli designs in front of Golu/Kolu or in your pooja room. You can colour them if you like.  Please watch the video below for better understanding. I have also shared more than 10 different navratri kolam ideas for drawing in the entrance of your house. I will try to make a collection of them soon. Thanks. HOW TO DO THIRUVILAKKU POOJA IN TAMIL - FRIDAY LAKSHMI POOJA

When we shared ourfriday pooja & Hridaya kamalam kolams, a reader asked me to share our friday pooja procedures in detail.So in this post,i have shared my wife’s method of doing Lakshmi pooja on Friday.I won’t say this is the authentic method.But my mom & my wife has been following this procedure for more than 40 years in our house each Friday.Now my daughter-in-law is also performing the same.In this post,i have written how to make Lakshmi poojai with Thiruvilakku poojai kolam,Hridayakamalam kolam and thiruvilakku pooja stotram/slokas along with 108 potri in tamil. i.e Archanai slokam in Tamil.I have tried my best to explain the pooja procedures.Hope u will find it helpful.I have attached all the sloka pictures from our book “ Jayamangala sthothram”. I have also typed the Shodasha upachara pooja sthothram in Tamil & English. If u want to use this pictures in your website,please ask our permission.Thanks for understanding.Please leave a comment here if its helpful for you…