Thiruvilakku pooja 108 potri in Tamil |தமிழில் 108 போற்றி -திருவிளக்கு வழிபாடு வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை 108 போற்றி



Thiruvilakku poojai 108 potri in Tamil and English with video.                                                                  
                                                                         

 




ஓம் 


1.பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி 
2.போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
3.முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
4.மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி
5.வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
6.இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
7.ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி
8.பிறர்வயமாகா பெரியோய் போற்றி
9.பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
10.பேரருட்கடலாம் பேரருளே போற்றி
11.முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி
12.மூவுலகும் தொழ மூத்தோய் போற்றி
13.அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி
14.ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
15.ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
16.இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி
17.மங்கள நாயகி மாமணி போற்றி
18.வளமை நல்கும் வல்லியே போற்றி
19.அறம் வளர் நாயகி அம்மையே போற்றி
20.மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி
21.மின் ஒளி பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
22.தையல் நாயகித் தாயே போற்றி
23.தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
24.முக்கட் சுடரின் முதல்வி போற்றி
25.ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
26.சூடா மணியே சுடரொளி போற்றி
27.இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
28.அருள் பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
29.அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
30.இல்லக விளக்காம் இறைவி போற்றி
31.சுடரே விளக்காம் தூயாய் போற்றி
32.இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
33.ஏரி சுடராய் நின்ற இறைவி போற்றி
34.ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
35.அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
36.தூண்டு சுடரனைய ஜோதி போற்றி
37.ஜோதியே போற்றி சுடரே போற்றி
38.ஓதும்  உள்ளொளி  விளக்கே போற்றி
39.இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
40.சொல்லக விளக்காம் ஜோதி போற்றி
41.பலர் காண் பற்பல விளக்கே போற்றி
42.நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
43.உலப்பிலா ஒளி வளர் விளக்கே போற்றி
44.உணர்வு சூழ் கடந்ததோர் விளக்கே போற்றி
45.உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
46.உள்ளத் தகளி விளக்கு விளக்கே போற்றி
47.மடம்படு உணர் நெய் விளக்கே போற்றி
48.உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி
49.இடம்படும் ஞானத் தீ விளக்கே போற்றி
50.நோக்குவார்க்கு எரி கொள் விளக்கே போற்றி   
51.ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி  
52.அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி  
53.ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி  
54.தில்லைப்  பொது நட விளக்கே போற்றி  
55.கற்பனைக் கடந்த ஜோதி போற்றி 
56.கருணையே உருவாம் விளக்கே போற்றி  
57.அற்புத கோல விளக்கே போற்றி  
58.அருமறை  சிரத்து விளக்கே போற்றி  
59.சிற்பர  வ்யோம விளக்கே போற்றி  
60.பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி 
61.உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி  
62கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி 
63.உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி 
64.பெருகருள் சுரக்கும் பெரும போற்றி 
65.இருள் சேர் இருவினை எரிவாய் போற்றி 
6.அருவே உருவே அருவுரு போற்றி 
67.நந்தா விளக்கே நாயகியே போற்றி 
68.செந்தாமரைத் தாள் தந்தாள்  போற்றி 
69.தீப மங்கள ஜோதி போற்றி 
70.மதிப்பவர் மனமணி விளக்கே போற்றி 
71.பாகம் பிரியா பராபரை போற்றி 
72.ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி 
73.ஏகமும் நடஞ்செய் எம்மான் போற்றி 
74.ஊழி ஊழி உள்ளோய் போற்றி 
75.ஆழியான் காண அடியே போற்றி 
76.ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி 
77.அந்தமில் இன்பம் அருள்வோய் போற்றி 
78.முந்தைய வினையை முடிப்போய் போற்றி 
79.பொங்கும் கீர்த்தி பூரண போற்றி 
80.தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி
81.அருளே உருவாய் அமைந்தோய்  போற்றி 
82.இருநில மக்கள் இறைவி போற்றி 
83.குருவென ஞானம் கொடுப்போய் போற்றி 
84.ஆறுதல் எமக்கிங்கு அளிப்போய் போற்றி 
85.தீதெலாம் தீர்க்கும் திருவே போற்றி 
86.பத்தியில் ஆழ்ந்த பரமே போற்றி 
87.எத்திக்கும் துதி எய்ந்தாய் போற்றி.
88.அஞ்சலென்றருளும் அம்மையே போற்றி 
89.தஞ்சமென்றவரை  சார்வோய் போற்றி 
90.ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி 
91.ஓங்காரத்து உள்ளொளி  விளக்கே போற்றி 
92.எல்லா உலகமும் ஆனாய்போற்றி
93.பொல்லா வினைகள்   அறுப்பாய் போற்றி 
94.புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் போற்றி 
95.செல்வாய செல்வம் தருவாய் போற்றி 
96.பூங்கழல் விளக்கே போற்றி! போற்றி !
97.உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி 
98.உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி 
99.செல்வம் கல்வி சிறப்பருள்போற்றி 
100.நல்லன்பு ஒழுக்கம்  நல்குவோய் போற்றி 
101.விளக்கிட்டார் மெய்நெறி விளக்குவாய் போற்றி 
102.நலம் எலாம் உயிர்க்கு நல்குவாய் போற்றி 
103.தாயே நின்னருள் தந்தாய் போற்றி 
104.தூய நின் திருவடி தொழுதனம் போற்றி 
105.போற்றிஎன்பார் அமரர் விளக்கே போற்றி
106.போற்றிஎன்பார் மனிதர் விளக்கே போற்றி
107.போற்றிஎன் அன்பொலி விளக்கே போற்றி
108.போற்றி!போற்றி! திருவிளக்கே போற்றி


1
.Obeisance to you who bestows us with riches & true wisdom
2. .......Blesses us the grace of Goddess Sri Lakshmi & worldly pleasures
3......... Goddess who shines bright as true wisdom
4.  .....present in three worlds -Heaven,earth & bathala loga
5.....Who gas grown as limitless joy
6.....manifesting in nature as divine light
7....who gave birth to whole universe
8..... who could not be gravitated by others
9....who is in the form of great happiness
10...as ocean of divine grace
11..... the most powerful,omnipotent
12. who is worshiped by all the three world
13.bestow us with limitless wealth
14...Divine light of joy
15...who has manifested as "AUM"
16.who dispels ignorance of self
17...Gem of Goddesses who is bestowing all essential good things for life
18..who graces us with all worldly riches 
19.Mother of all charities & manifesting in the form of all charities
20.who manifests as form of light energy , shining in nature
21.Shining as lightning in nature
22.mother of all women folk
23.living as precious gem in the heart of all devotees
24.In the form of Sun,moon & third eye
25.Divine light form
26. Gem which is not worn by anyone,illuminating light
27.who dispels ignorance ( akgnana)
28.Who shows the truth ( self realization)
29.who is in the form of knowledge
30.who dwells in all in the form of divine light.
31.glowing in the form of light in all lamps
32.who destroys all troubles in the life
33.Growing & glowing in the  light
34.who stands tall as true wisdom of divine light
35/the foremost of all vedhas
36.who kindles devotion in the humans
37.Obeisance to you divine light
38.Chanting as mantras in inner heart , glowing as divine light
39 Who is present in all human beings as divine light
40.coming out as divine speech
41.worshiped by all as divine light
42.in the form of panchatchara ( nama:shivaya)
43.Divine growing light
44.who is apart from our senses
45.Dwells in the soul in the form of light
46.shining in all hearts
47.Glowing in Cow's ghee lamp
48.You are the life
49.You are the divine light
50.visualized by devotees in the form of light
51.You are the beginning and middle
52.endless & could not be measured
53.You are in the form of senses
54,Shining in Chit Ambaram( related to Chidambaram Sri Nataraja)
55.in the form of divine grace
56.Wonderful, beautiful divine light
57.in the form of Holy hymns -Vedhas
58.manifesting as divine sky
59.Divine dancer
60.Performing beautiful dance
61.Dispel ignorance from our heart
62.Destroy the five cunning senses
63.,dwells in persons of true devotion
64.who showers grace to all human
65.Drives away unwanted old karmas 
66.in the form of shape( vigraha),shapeless (aroopa),shivalinga roopa(aru - uruva roopa)
67. self glowing light
68.Grace us with your divine lotus feet
69.in the form of all well wishing good deeds
70.decorates the worshipers heart
71.Never gets separated from Lord Shiva( Ardhanaari sorupa)
72.Sitting in the head of all Holy Hymns 
73.Performing cosmic dance
74.Ever living even during deluges
75.Shown divine feet to Lord Vishnu
76.You are the beginning & You are the end
77.Blessing us with everlasting Happiness
78.Destroys old evil deeds ( praraptam,aagamiam,sanchtha karma)
79.Always great
80.showering Divine Grace
81.in the form of shape less Divine Grace
82..Goddess of both the Heaven & earth
83.in the form of Guru blessing us with true knowledge
84.only solace o all of us
85.Protects all devotees from evil
86.Ever living in the devotees heart
87.worshiped by all from all directions
88. truly our savior
89.Protects those surrender to  Her Holy feet
90.Dwells in all the hearts with full of devotion
91.present in the mantra "AUM"
92.Manifesting in the form of universe
93.destroys unwanted evil forces
94.Who has descended in us with Her glorious divine feet
95.who bestows us with riches
96.Divine lotus feet
97.blesses the world with full happiness
98.who feeds all the hungry in the world
99.grace us with good wealth,knowledge &fame
100.grace us with good,kind , disciplined life
101.teaches the truth to those who lights the holy lamps
102.bless all with your good wishes\
103.Oh, Mother we are really blessed
104.worship your Holy feet
105.Angels worship You
106.Humans worship you
107.Obeisance to You my kind holy light
108. Hail You!Hail You ! Holy lamp

Gayathri mantra describes  meditating God in the form of Divine Light( thath savithur varenyam). 




 






 ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் 

1.அருளுபதேசம் செய்யும் அவருள்ளே குருவடிவாய் இருந்து 
  அருள்வாய் போற்றி
2.வக்கிர துண்டரின் வடிவாய் விளங்கி 
  விக்கின விநாசம் செய்வாய் போற்றி 
3.வாக்கினில் வாணி வடிவாய் விளங்கி
   வாக்கு வண்மையை  அருள்வாய்  போற்றி
4.பல் வகை நன்மையையும் இன்பமும் பயக்கும் 
செல்வம் தந்தருள் செல்வியே போற்றி
5.பழமையை ஒழித்து புதுமையைப் பெற்றிட 
   அழிவு செய் சக்தியாம் அபர்ணையே  போற்றி
6.அறுமுகன் வடிவாய் அசுரர் குழுவினைச்
  செறுதல்  செய்யும் தேவியே போற்றி
7.சிவனெனும் வடிவாய் தேவி நீயமர்ந்து 
  பவமதை அறுப்பாய் பரையே போற்றி
8.திருமால் உருவாய் திகழ்ந்திடும் தேவி 
   கருமேகமென்னும் கருணையே போற்றி
9.இராமரின் உருவாய்  இராவணற் செற்று
    தராதலங் காத்த தருணீ போற்றி
10.கண்ணனின்  உருவாய் வேய்ங்குழல் ஊதி 
    அண்ணல் கீதையை அருளினாய் போற்றி
11.வாராஹி யென்னும் சேனாபதியாய் தேரரை 
     அழிக்கும் தெய்வமேபோற்றி
12.மந்திர நாயகி சியாமளை என்னும் 
    மந்திரிணி ஆகிய மகதீ  போற்றி
13.ஐந்தொடு  நான்கு ஆவரணங்களில் உறை 
     மைந்துடை யோகினி கணமே போற்றி
14.சக்கர ராஜமாம் ஸ்ரீ சக்கரத்தினில்  
      செக்கர் போன்றொளிரும் சிவையே போற்றி
15.கலியை அகற்ற கருணையால் உருவாய் 
     லலிதையாய்வந்த  நலிவிலாய்  போற்றி
16.அருவமாய் எங்கும் அனைத்திலும் நிறைந்த 
     பிரம்மமே உள்ள பிரசமே போற்றி!

ஈசுரர் தேவர் இடிகள் மனிதர் 
பாசுரமாகிய  பருதி சந்திரன் 
மொய்ம்புடைச் சக்திகள் முடிவிலா உயிர்கள் 
ஐம்பெரும் பூதம் அனைத்துமாயிருந்தும் 
அல்லாதுயர்ந்த அன்னையே லலிதா !
பொல்லாமையில்லா நல்லாய் நாமம் 
பதினாறு சொல்லி பாமலர் பொழிந்தேன் 
பொதுவிலாதருள்வாய்  போற்றி!போற்றி!

பெருகிடும் செல்வம் நிறைந்திட வீட்டில் 
பெரியவர் பிள்ளைகள் பிணி நோய் ஒன்றுமில்லாமல் 
 உவப்பொடு வாழ்ந்திட நாளும் 
மருமலர் தூவி வழிபடும் யாங்கள் 
மகிழ்ந்திட வரங்களைத் தருவாய் 
திருவிளக்குருவாய்த்  திகழ்ந்திடும் லலிதா 
தேவியே ! பெரியநாயகியே !


மேற் கண்ட 108 போற்றியை  திருவிளக்கினை ஐந்து முகமும் ஏற்றி பூ அல்லது  குங்குமம் கொண்டு திருவிளக்கின் பாதத்தில்  அர்ச்சிக்கவும் .வெள்ளிக்கிழமைகளில் காலை அல்லது மாலை வேளையில் செய்யவும் .

सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थ साधिके | शरण्ये त्रयंबके देवि नारायणि नमोस्तु ते |नारायणि नमोस्तु ते ||
ஸர்வ மங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே | சரண்யே த்ர்யம்பகே தேவி நாராயணி நமோஸ்து தே | நாராயணி நமோஸ்து தே||

மங்கலம் அனைத்திற்கும் மங்கலமானவளே ,மங்கலத்தைத் தருபவளே ,எல்லா நன்மைகளையும் தருபவளே ,சரணடைவதற்கு உரியவளே ,மூன்று கண்களை உடையவளே , தேவி நாராயணி உனக்கு நமஸ்காரம் .

पद्मप्रिये पद्मिनी पद्महस्ते पद्मालये पद्मदलायताक्षि | 
विश्वप्रिये विष्णु मनोअनुकूले त्वत्पादपद्मं मयि सन्नीधवस्तव ||  

பத்மப்ரியே பத்மினி பத்மஹஸ்தே பத்மாலயே பத்மதலாயதாக்ஷி |
விச்வப்ரியே விஷ்ணு மனோனுகூலே த்வத்பாத பத்மம் மயி ஸன்னிதஸ்த்வ ||

தாமரையை விரும்புவளே ,தாமரை மகளே ,தாமரையைக் கையில் ஏந்தியவளே , தாமரையில் வீற்றிருப்பவளே ,தாமரையிதழ் போன்ற அகன்ற கண்களை உடையவளே ,உலகிற்கு பிரியமானவளே .விஷ்ணுவின் மனதிற்குகந்தவளே ,உனது திருவடித்தாமரைகளை என் மீது வைத்தருள்வாய் .

நைவேத்தியம் 

 பால் பாயசம் 

சக்கரைப் பொங்கல் 

புட்டு 

இவற்றில் ஒன்று வெல்லம் உபயோகித்து படைக்கலாம் 


வாழைப்பழம் ,தாம்பூலம் முடிந்தால் தேங்காயும் வைத்து நைவேத்தியம்
செய்யலாம்  .முன்னரே ஒரு பதிவு  போட்டிருக்கிறோம். இது எளிதாக்கி 
போட்டிருக்கின்றோம். 

இந்த  திருவிளக்கு வழிபாடு தேவி லலிதாம்பிகையை வழிபடும் எளிதான முறை .  ஸ்ரீ பார்வதி,ஸ்ரீ மஹாலக்ஷ்மி ,ஸ்ரீ ஸரஸ்வதி  மூவருடன்  ஸ்ரீ சக்கரத்தினில் விநாயகர் ,ஆறுமுகன் ஸ்ரீ மஹாவிஷ்ணு ,பிரம்ம தேவர் மற்றும் ஸப்த மாதாக்களுடன் லலிதாம்பிகை நடுநாயகமாக ஸ்ரீ சதாசிவத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறாள். நன்னிலம் ரயில்வே ஸ்டேஷன்  அருகே சுமார் 1 கி .மீ தொலைவில் திருமீயச்சூர் என்னும் ஸ்தலத்தில் ஸ்ரீ லலிதாம்பிகை ஸமேத மேக நாதர் கோயில் உள்ளது . தேவார பாடல் பெற்ற ஸ்தலம் .நல்ல சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைதியான சூழ் நிலையில்  அமைந்துள்ளது.சென்று வணங்கி  பயன் பெருங்கள் .


லலிதாம்பிகை தனக்கு காலில் -திருவடியில் கொலுசு போடாமல் இருக்கிறது .கொலுசு அணிவிக்க வேண்டும்  என்று தன் பக்தரான பெங்களூரூரைச் சேர்ந்த ஒரு அம்மையாரிடம் கனவில்தோன்றி  
  கூறியுள்ளாள்.அவர்கள்எங்கு  கோயில் கொண்டுள்ளாள் என்று தெரியாமல் , விசாரித்து வருகையில் தமிழ் பக்தி மலர் புத்தகத்தில் லலிதாம்பிகை படத்துடன் திருமீயச்சூர் ஸ்தலம் விபரத்தைப் பார்த்து அங்கு சென்று கோயில் அர்ச்சகரிடம் கனவில் சொல்லியதை கூற அர்ச்சகர் அம்பாள் விக்கிரகத்தில் காலில் கொலுசு அணிவதற்கு ஒரு துவாரம் இருப்பதைக் கண்டறிந்து பின்னர் கொலுசு அணிவித்து வணங்கினார்கள் .

இவ்வூருக்கு அருகிலேயே திருவீழிமிழலை என்னும் தேவார பாடல் பெற்ற ஸ்தலம் உள்ளது . கி .பி 7ம் நூற்றாண்டில் சம்பந்தரும் அப்பர் பெருமானும் இங்கு வந்த பொழுது மிகவும் பஞ்சம் வந்து மக்கள் உணவிற்கே வழியின்றி தவித்தார்கள் . இதனைப் பார்த்த இருவரும் சிவனைத் துதித்து தேவாரம்பாட  தினந்தோறும் அங்கு கோயில் பிரகாரத்தில் இருக்கும் பிள்ளையார் சன்னிதியில் சிவபெருமானின் அருளால் ஆளுக்கு ஒரு பொற்காசு -தங்க நாணயம் கிடைத்தது . அதை வணிகர்களிடம் கொடுத்து அதற்கான பணம் பெற்று மக்களின் பசியாற்றியுள்ளார்கள் .அந்த பிள்ளையாருக்குப் பெயர் படிக்காசு பிள்ளையார் . இங்குள்ள கோயில் சிற்பங்கள் மிகவும் நுணுக்கமானவை .பின்னர் வந்த கோயில் கட்டும் சிற்பிகள் கோயில் கட்ட ஒப்பந்தம் செய்யும்போது திருவீழிமிழலை கோயில் சிற்பங்கள் நீங்கலாக என்று எழுதுவார்கள் . ஒருமுறை சென்று தரிசித்து பயன் பெறுங்கள் .



   
 







































Comments