Dakshinamurthy stotram | Dakshinamurthy mantra (14 )

                                             श्री दक्षिणामूर्ति स्तोत्रम्  14

अगौर गात्रै  रललाट नेत्रै  रशान्त वेषै रबुजङ्ग     भूषै :|  अबोध मुद्रै  रनपास्त निद्रै  रपूर्ण कामै  रमरै रलं  न :||

அகௌர காத்ரை  ரலலாட  நேத்ரை ரஸாந்தவேஷை ரபுஜங்க பூஷை:| 

அபோதமுத்ரை   ரநபாஸ்த  நித்ரை  ரபூர்ண காமை ரமரை ரலம் ந :||

अगौर गात्रै - வெண்மையான சரீரம் இல்லாவதர்களாயும் अलालट नेत्रै -  நெற்றிக்கண் அற்றவர்களாயும்,  अशान्तवेषै  -   அமைதியைத்தரும் வேஷம் இல்லாதவர்களாயும் अबुजङ्ग बूषै - பாம்புகளை அணிகலமாகக்கொள்ளாதர்வகளாயும் अबोध  मुद्रै - சின் முத்திரை இல்லாதவர்களாயும் अनपास्त निद्रै - மோஹம்  உள்ளவர்களாயும் अपूर्णकामै - நிறைவேறாத மனோரதங்களையுடையவர்களுமான   अमरै தேவர்களால் न : நமக்கு अलम् யாது பயன் .

தக்ஷிணாமூர்த்தி  அழகிய திருமேனி படைத்தவர்.அவரது  உடல் களங்கமற்ற சந்திரன்போல் வெண்மையானது .அவரே பரமேச்வரன்.ஆதலால்  அவர் நெற்றிக்கண் பெற்று விளங்குகிறார்.அக்  கண்ணிலிருந்து அக்னி ஜ்வாலைகள் கிளம்புவதால் அவர் பகைவர்கள் அனைவரையும் அழிக்கும் ஆற்றலுடையவர்.இவ்வாறு  இருப்பினும் அவர் மிகவும் சாந்த ஸ்வரூபி.ஆன்ம  ஞானமே உருவெடுத்து விளங்குவதுபோல் காணத்தக்கவர்.அவருடைய திருமேனி  அரவங்களால்  அழகு படுத்தப் பட்டுள்ளது. அதனால் அவர் பயங்கரமாயும்  ரமணீயமாயும் காட்சியளிக்கின்றார் . அவரது திருக்கரத்தில் ஜீவனும் பிரம்மமும் ஒன்றே என்று அறிவுறுத்தும் சின்முத்திரை காணப்படுகின்றது.அவர் அஞ்ஞானம்  என்ற தூக்கத்தை விலக்கி ஆத்மபோதம் என்ற   ஜாக்ரதவஸ்தையிலேயே இருக்கின்றார்.இவ்வாறு  நம் அறியாமையெனும் இருளை  நீக்கி நமக்கு ஆன்ம ஒளியை அளிக்கும் சின்மயனான தக்ஷிணாமூர்த்தியையே  நாம் போற்றுவோமாக.இக்குணங்களற்ற மற்ற  தெய்வங்களைப்  போற்றுவதால் யாது பயன். 











Comments