Kalabhairavashtakam slokam 2 ( Sri Adi Sankarar )


                     भानुकोटि  भास्वरं      भवाब्धितारकं      परं 

                           नीलकण्ठ मीप्सितार्थदायकं    त्रिलोचनम्   | 
     
                      कालकालमम्बुजाक्ष     मस्तशून्यमक्षरम्  

                              काशिका  पुराधिनाथ  कालभैरवं  भजे || 


                       பானு கோடி பாஸ்வரம் பவாப்தி  தாரகம்  பரம் 

                              நீலகண்டமீப்ஸி தார்த்த  தாயகம்   த்ரிலோசனம் | 

                        காலகாலமம்புஜாக்ஷமஸ்தஸூன்யமக்ஷரம்    

                               காஸிகா புராதிநாத  காலபைரவம்   பஜே ||   

                   भानुकोटि = கோடி   ஸூ ர்யர்கள்போல், भास्वरं = பிரகாசிக்கிறவரும்

भवाब्धितारकं= சம்சாரக்கடலைத்  தாண்டும்படி செய்கின்றவரும்

மேலானவரும் , नीलकण्ठं = நீல நிறமான கழுத்துடையவரும்,  ईप्सितार्थ दायकं =

விரும்பும் பொருளைத்  தருபவரும் ,त्रिलोचनं = முக்கண்ணனும் , 

कालकालं = மிருத்யுவுக்கும்  ம்ருத்யுவாயும் , अम्बुजाक्षं = தாமரைப் 

போன்ற  கண்களுடையவரும், अस्तशून्यं  = சூன்யமற்றவரும்,  अक्षरं=      

அழிவற்றவருமான , काशिका  पुराधिनाथ= காசிமாநகரின் அதிபதியான, 

कालभैरवं= காலபைரவரை, भजे = பஜிக்கிறேன் . 

       கோடி  ஸூர்யர்கள்  ஒரே சமயத்தில்  இருந்தால்  எத்தனை 

பிரகாசமிருக்குமோ அத்தனை  பிரகாசமுள்ளவர் .பிறவிக் கடலில் 

விழுந்து  துன்பமுறும் நம்மை அக்கரை  சேர்ப்பவர் . அவரே  மேலான

தெய்வம்.  கழுத்தில் நீல  நிறமும் தாமரைப் போன்ற கண்களும்  

உள்ளவர் .வேண்டியதை  எல்லாம்  கொடுப்பவர் . முக்கண்ணன் . 

காலனையும் நிக்ரஹம் செய்த  இவர்  ம்ருத்யு பயத்தைப் போக்குபவர். 

அழிவற்றவர் .இவர்  இல்லாத  இடமும்  காலமும் இல்லை .இந்த காசீ 

நகர  ஸ்வாமியான காலபைரவரை பஜிக்கிறேன். 

   
    He  shines as the appearance of  lakhs of ( crore ) suns at a time.He ferries us safely  ashore, who are suffering in the ocean of birth,The Supreme Lord.He has eyes that of lotus( beautiful ) & dark blue colored throat ( Similar to Lord Shiva).Fulfils all our wishes with an eye of fire ( third eye ) in the forehead.He even destroyed the God of death( Yama - to  protect his devotee).He dispels the fear of facing  death .He is eternal.He is ever present  in all places at all times. I worship The Lord of Great city of Kasi.


  

 Sri  Swarna Akarshna Bhairavar idol carved in stone. ( Sri.Soundarraja Perumal temple,Thadikombu, 10 kms  south of Dindigul( Madurai ),Tamilnadu.Though this is a Vaishnava temple, Vilva is the Sthala Vruscha here.This Lord Soundarraja is said to be the same Lord Kallazhar  at Thirumaliruncholai - Madurai.Temple dates back to 500 years built by Sri.Achutha devarayar of Vijayanagar Empire.Swarna Akarshana Bhairavar solves the economic problems of devotees.All the sculptural works in this temple is exceptional.One has to directly visit this temple to have a feast for their eyes.Photo courtesy - TN TEMPLE ,Tamilnadu All Hindu temples.








Comments