Dakshinamurthy slokam | Dakshina murthy mantra

                                                 श्रीढछिणा मूर्ति स्तोत्रम्  9

एकेन  मुद्रां परशुं करेण  करेण  चान्येन मृगं ढधान :स्वजानुविन्यस्तकर : पुरस्ताढाचार्य  चूडामणि राविरस्तु||  

 एकेन  करेण - ஒரு கையினால், मुद्रां - சின் முத்ரையையும்,अनयेन करेण  - மற்றொரு  கையினால் ,मृगं  - மானையும் ,दधान - தரித்துக் கொண்டிருக்கின்றவராயும் ,स्वजानु - தன்னுடைய முழங்காலில் ,विन्यस्तकर - வைக்கப்பட்ட கையையுடையவருமான आचार्यचूडामणि   - ஆசார்யர்களுக்குள் சிறந்து விளங்கும் ரத்னமான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி  पुरस्तात् -  முன்னால் आविरस्तु  தோன்றட்டும். 

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தன்னை அண்டும் பக்தர்களுக்கு ஞானோபதேசம் செய்வதற்காகத் தன்னுடைய கைகளில் ஒன்றில்  சின் முத்திரையை வைத்துக்கொண்டிருக்கிறார் .கட்டை  விரலையும் ஆள் காட்டி விரலையும் சேர்த்துக் காட்டும் அடையாளம் சின் முத்திரை எனப்படுகின்றது .இந்த சின்முத்திரை ஜீவனும் பிரம்மமும் ஒன்றுதான்  என்பதைக் காட்டுகின்றது. இந்த ஞானத்தைப் பெற்றவன் பிறவித் துன்பத்திலிருந்து விடுபட்டு பிரம்ம சாட்சாத்காரம்  அடைகிறான் .இதற்கு இடையூறாக   இருப்பது அக்ஞானம் .இதைப் போக்குவதற்கு அடையாளமாகத்  தன் கையில்  கோடாலியை வைத்துக்கொண்டிருக்கிறார் .அடர்ந்த காட்டினுள் இருள் சூழ்ந்திருக்கும்.செடி கொடி முதலியவற்றை வெட்டி எறிந்தால்தான் அங்கு வெளிச்சம் வரும் .வெளிச்சம் வந்தவுடனே இருள் நீங்கும் .அது போல் அக்ஞானம் என்ற இருளையும் அதன் கார்யமான காமம் முதலியவற்றையும் அகற்றுவதின் நிமித்தமாக  கோடாலி  விளங்குகிறது 
ஸ்ரீ  தக்ஷிணா மூர்த்தி இவ்வாறு தன்னிடம்  வரும் பக்தர்களைக் காக்கின்றார் .காமம் , க்ரோதம் முதலியவை மிருகங்களின் ஸ்வாபகுணங்கள்.ஒரு கையில்   மானை வைத்துக்கொண்டிருப்பது  காமாதிகளை அடக்கி இருப்பதைக் காட்டுகின்றது.அவர்  அருள் இருந்தால் நம்மையும் காமாதிகள் துன்புறுத்தாது .அவர் யோகாஸனத்தில்   அமர்ந்திருப்பதால் ஓர் கையை முழங்காலில் வைத்துக்கொண்டிருக்கிறார் .எப்பொழுதும் அண்டியவர்களைக் காப்பதற்காக அவர்  த்யானத்தில் ஆழ்ந்துள்ளார் .இவ்வாறான  ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி என் முன் தோன்றட்டும் .

Sri.Dakshinamurthy (Alangudi top )Photo courtesy Sri.Murugaiyan Thangavel.


Comments