Dakshinamurthy stotram | Dakshinamurthy mantra 11

                                                  श्री ढक्षिणामूर्ति स्तोत्रम 11

चारुस्मितम  सोमकलावतंसं  वीणाधरं  व्यक्त  जटाकलापम् |  उपासते  केचन  योगिनस्त्वा  मुपात्त नादानुभव 
प्रमोदम् || 

சாருஸ்மிதம்  ஸோமகலாவதம்ஸம்   வீணாதரம்   வ்யக்தஜடாகலாபம்| 

உபாஸதே   கேசந யோகிநஸ்த்வா   முபாத்த நாதானுபவப்ர மோதம்|| 

चारुस्मितम - அழகிய  புன்முறுவலையுடையவரும் सोमकलावतंसं  சந்திர கலையை ஆபரணமாகக்  கொண்டவரும் ,  वीणाधरं  வீணையைக்  கையிலேந்தியவரும், व्यक्त  जटाकलापम्  விரிந்த  சடைக்கூட்டத்தையுடையவரும்,  मुपात्त नादानुभव प्रमोदम्  அடையப்பட்ட  இன்னிசை  நுகர்ச்சியின் மகிழ்ச்சியை உடையவருமான त्वां  உம்மை , केचन சில योगिन  யோகிகள் उपासते  உபாஸி க்கின்றனர் .

இங்கு  வீணா  தக்ஷிணாமூர்த்தியின்  உபாஸனை   கூறப்படுகிறது . அவர் முகத்தில் அக மகிழ்வின் சின்னமாய் புன்முறுவல் பூத்துக் காணப்படுகின்றது .அவரது  சடை முடியில் காணப்படும் சந்திர கலை அவரது  முகத்தை   மிகவும் பொலிவு பெறச் செய்கின்றது. அவர்  தனது திருக்கரத்தில் வீணையைத் தாங்கி  இன்னிசைகளை எழுப்பிக்  கொண்டிருக்கிறார்.அவர்  ஜடைகளைத்  தரித்துக்கொண்டிருக்கிறார் .அவர்  வீணையின் இனிய நாதத்தை அனுபவித்து ஆனந்தமடைகின்றார். இவ்வாறாக ஆனந்த  மூர்த்தியான தக்ஷிணாமூர்த்தியை உபாஸிக்கும் யோகிகள்  அநாஹதச் சக்ரத்தில் எழும் இன்னிசையைக் கேட்டு ஆனந்த வெள்ளத்தில் ஆழ்கின்றனர். 

  தக்ஷிணாமூர்த்தி, யோகதக்ஷிணாமூர்த்தி, வீணாதக்ஷிணாமூர்த்தி என்று மூன்று  ரூபங்கள் உண்டு .தக்ஷிணாமூர்த்தியாக இருந்து வேதாந்த தத்வஞானத்தை உபதேசித்தார் . யோக முறைகளை  அனுஷ்டித்துக் காண்பித்த நிலைக்கு யோகதக்ஷிணாமூர்த்தி என்று பெயர். நாரதாதிகளுக்கு வீணை வாசித்துக் காட்டிய நிலைக்கு வீணாதக்ஷிணாமூர்த்தி என்று பெயர் .



அனைவருக்கும் எங்கள் இனிய துர்முகி வருடத்  தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .Wish you all happy Tamil Dhurmuki new year.We pray God Dakshinamurthy to bless us all with longer life , good wealth, health & understand " Tat Thva Masi" Mahavakya.



Comments