Dakshinamurthy Stotram | Dakshinamurthy Mantra ( 12 )

                                                          श्री दक्षिणामूर्ति  स्तोत्रं 12
     
उपासते  यं मुनय : शुकाध्या :  निराशिषो  निर्ममता     धिवासा : | तं    दक्षीणामूर्तितनुं   महेशं    उपास्महे  मोहमहार्ति  शांत्यै ||

உபாஸதே  யம் முநய :   ஸுகாத்யா :  நிராஸிஷ   நிர்மமதா  திவாஸா : | தம்  தக்ஷிணாமூர்த்தி  தநும்  மகேஸம்   உபாஸ்மஹே   மோஹமஹார்த்தி   ஸாந்த்யை  ||

यं - எவரை , शुकाध्या - சுகர் முதலிய  मुनय - முனிவர்கள் निराशिष- பற்றற்றவர்களாயும் ,  निर्ममता  धिवासा - கர்வத்திற்கு  இடம் கொடாவதர்களாகவும் இருந்து கொண்டு उपासते உபாசிக்கிறார்களோ तं அந்த दक्षीणामूर्तितनुं - தக்ஷிணாமூர்த்தியின் உருவந்தாங்கிய महेशं  பரமேஸ்வரனை  मोहमहार्ति  शांत्यै மோஹமென்ற  பெரும்துன்பம் நீங்குவதற்காக  उपास्महे  பஜிக்கின்றோம்.

பரமேஸ்வரனை சுகர் முதலிய மஹரிஷிகள் உபாஸி க்கின்றனர் .அவர்களுக்கு மோஹம் இல்லை.  அவர்கள் அனைவரும் ஒரு பொருளிலும் ஆசை இல்லாவதர்கள். அவர்கள் தங்களுடைய உள்ளத்தில் அகங்கார மமகாரங்களுக்கு  இடம் கொடாதவர்கள்.அவர்கள் பரமேஸ்வரனை அனவரதமும் உபாஸிப்பதால் பரமாநந்தத்தைப்  பெற்று  மகிழ்கின்றனர் . 


நமக்கோ மோஹம் , ஆசை ,அஹங்காரம் இன்னும் நீங்க வில்லை.இவைகளால்  ஏற்படும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் .பரமேசனின் அருள் கிடைத்தால்தான் இவை நம்மை விட்டு விலகும். மோஹம்  முதலியவை நீங்குவதற்காக தக்ஷிணாமூர்த்தியை   உபாஸிப்போம்.ஆசை, கர்வம் முதலியவை  இல்லாத சுகாதி முனிவர்களே அவரை உபாஸிக்கும் பொழுது நாம் 
உபாஸிக்கவேண்டும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா .







Comments