श्री दक्षिणामूर्ति स्तोत्रम् 15
दैवतानि कति सन्ति चावनौ नैव तानि मनसो मतानि मे | दीक्षितं जडधिया मनुग्रहे दक्षिणाभि मुखमेव दैवतम् ||
தைவதானி கதி சந்தி சாவநௌ நைவ தானி மநஸோ மதானி மே |
தீக்ஷிதம் ஜடதியா மநுக்ரஹே தக்ஷிணாபி முகமேவ தைவதம் ||
दैवतानि कति सन्ति चावनौ नैव तानि मनसो मतानि मे | दीक्षितं जडधिया मनुग्रहे दक्षिणाभि मुखमेव दैवतम् ||
தைவதானி கதி சந்தி சாவநௌ நைவ தானி மநஸோ மதானி மே |
தீக்ஷிதம் ஜடதியா மநுக்ரஹே தக்ஷிணாபி முகமேவ தைவதம் ||
अवनौ - பூமியில், कति - எவ்வளவு , दैवतानि - தேவதைகள், सन्ति - இருக்கின்றனர். तानि - அவர்கள், मे - என்னுடைய , मनस :மனதிற்கு, नैव मतानि - உகந்தவர்களாக இல்லவே இல்லை. जडधियां - அறிவற்றவர்களுக்கு, अनुग्रहे - அருள் புரிவதில், दीक्षितं - தீக்ஷைபெற்ற, दक्षिणाभि मुखमेव - தென்திசையை நோக்கி இருப்பவரே, दैवतम् - தேவதை ,
இப்போவுலகின்கண் எண்ணற்ற தெய்வங்கள் போற்றப்படுகின்றன .ஆனால் அவர்கள் தக்ஷினாமூர்த்தியைப்போல் ஆன்ம ஞானத்தை அளித்து ஜீவர்களை அஞ்ஞானமெனும் ஆழ்ந்த நித்திரையிலிருந்து எழுப்பும் சக்தி வாய்ந்தவர்கள் அல்ல.ஆகையால் அவர்கள் என் மனதிற்கு உகந்தவர்கள் அல்ல.எனக்கு ஆத்மபோதத்தை அளிக்கவல்ல தக்ஷிணாமூர்த்தியே உகந்த தெய்வம்.
மேற்கண்டவாறு கூறியிருப்பதைக்கொண்டு பகவத்பாதர் மற்ற தெய்வங்களை இகழ்வதாக நினைக்கக்கூடாது. அவர் ஆறு சமயங்களையும் நிலை நாட்டியஆச்சார்யபுருஷர்.தக்ஷிணாமூர்த்தியைப் போலவே மற்ற தேவதைகளையும் கொண்டாடுகின்றவர் . அவர் மற்ற எல்லா தேவதைகளையும் போற்றுவதற்காகப் பல துதிகளையும் இயற்றியுள்ளார்.நமக்குப் பல தெய்வங்களிடத்தும் பக்தி இருப்பினும் நம் மனம் ஒரே ஒரு தெய்வத் தினிடத்து நிலைத்து நிற்க வேண்டும் .இம்மாதிரி ஒரே தெய்வத்தை அனவரதமும் தியானிப்பதற்கு " பராபக்தி "என்று பெயர். இவ்வாறு சிறந்த பக்தியுள்ள மகாபுருஷனுக்கு ஆன்மஞானம் எளிதில் கிட்டும் .அவனவன் ருசிப்படி இஷ்டதேவதையிடம் பர பக்தி ஏற்படுவதற்காக ஒவ்வொரு ஸ்தோத்திரத்திலும் அந்த தேவதையே மிகவும் உயர்ந்தது எனக் கூறுவார்."नहि निन्दा निनिन्दतुं प्रवृत्ता अपि तु स्तुत्यं स्तोतुं " என்ற நியாயப்படி நிந்தை போல் காணப்படும் வாக்யங்களுக்கு தக்ஷிணாமூர்த்தியை ஸ்துதி செய்வதில்தான் தாத்பர்யம். உண்மையில் ஒரே ப்ஹ்ரம்மம்தான் பல உருவம் கொண்ட பல தேவதைகளாகக் காணப்படுகின்றது.
Comments
Post a Comment