Kalabairavastakam slokam 9



                           कालभैरवाष्टकं  पठन्ति  ये  मनोहरं 

                              ज्ञानमुक्ति  साधकं  विचित्र  पुण्यवर्धनम्  |

                          शोकमोह लोभदैन्य कोपतापनाशनं 

                              ते प्रयान्ति कालभैरवांघ्नि सन्नितं ध्रुवं || 

                     காலபைரவாஷ்டகம்  படந்தி  யே  மனோஹரம்  

                         ஞான முக்திஸாதகம்  விசித்ரபுண்ய வர்த்தனம் 

                     சோக  மோஹ லோப தைன்ய கோப தாப  நாசநம் 

                     தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி  ஸந்நிதிம் த்ருவம் .


          
        ये = எவர்கள்,  मनोहरं = இனிமையானதும் , ज्ञानमुक्ति  साधकं = ஞானம் 

மூலம்  முக்தியைப்பெற  ஸாதனமாக உள்ளதும் , विचित्र  पुण्यवर्धनम्  = 

 பலவித  புண்யங்களை வளரச்செய்வதும்,  शोक = சோகம், मोह = மோஹம் ,

लोभ = லோபம் , दैन्य = தைன்யம் , कोप = கோபம்,  ताप = தாபம் இவைகளை , 

नाशनं = போக்குவதுமான , कालभैरवाष्टकं = காலபைரவாஷ்டகம்  என்ற இந்த 

ஸ்தோத்ரத்தை , पठन्ति = படிக்கிறார்களோ , ते = அவர்கள், ध्रुवं = 

நிச்சயமாக, कालभैरवांघ्नि सन्नितं = காலபைரவரின்  பாதார விந்தத்தின்   

சமீபத்தை,  प्रयान्ति = அடைகிறார்கள் . 

                            
 எட்டு ஸ்லோகங்கள்  கொண்ட இந்த      காலபைரவாஷ்டகம்   

படிப்பதற்கும்  கேட்பதற்கும் இனிமையானது .ஞானத்தைக் கொடுத்து   

அதன் மூலம் மோட்சத்தையும் தரவல்லது .ஞானத்திற்கு  ஸாதனமான  

ஏராளமான  புண்யங்களையும் பெருக்குகிறது. சோகம் ( வஸ்துக்களின் 

பிரிவினால் உண்டாகும் துக்கம்) மோஹம் ,பேராசை , ஏழ்மை, கோபம்   


ஆத்யாத்மிகம் , ஆதி பௌதிகம் , ஆதி தைவிகம்  என்ற தாபங்கள்   

இவற்றையெல்லாம் அடியுடன் போக்கக்கூடியது. இந்த ஸ்தோத்திரத்தை 

தினமும்  படிப்பவர்கள் நிச்சயமாக  காலபைரவரின்  சரணாரவிந்த   

ஸந்நிதியை   அடைவார்கள் .      


  Kalabairavashtakam consists of 8 slokas, if we read regularly relieves us from worldly            

sorrows.Purifies our mind.It grants us real wisdom.liberates us. Relieves  people from lust,     

greed, anger ,  poverty. It relieves us  from "Aathyatmikam,Aathi bowthikam &              

Athi Daivikam"

 Aathyatmikam : diseases of our body & mental worries.

Aathi bowthikam: Sufferings caused by other living beings.

Athi Daivikam:sufferings caused by natural forces like rain,thunder ,fire. You would have 

observed while Vedic pandits recite mantras, they recite , Om Shanthi,Shanthi,Shanthi three   

times which is to get rid of above said three sufferings.

  



  



                                          Photo courtesy : Kumudam Jothidam   

                      


Comments