Kalabhairavastakam slokam 3




                            शूल   टङ्क    पाश   दण्ड    पाणि मादिकारणं 

                                 श्याम कायमादि  देवमक्ष रं  निरामयम्  |

                             भीमविक्रमं    प्रभुं   विचित्र  ताण्डवप्रियं 

                                 काशिकापुराधि  नाथ  कालभैरवं बजे ||


                   ஸுல  டங்க  பாஸ   தண்ட  பாணி மாதி  காரணம்  

                       ச்யாம  காயமாதி  தேவமக்ஷரம் நிராமயம்  |

                    பீமவிக்ரம   ப்ரபும்  விசித்ர தாண்டவப் ப்ரியம் 

                         காஸிகாபுராதிநாத  காலபைரவம்  பஜே ||


             शूल   टङ्क    पाश   दण्ड   पाणिं  - சூலம், உளி ,  பாசம் , தண்டம்   

இவைகளைக்    கையில்  வைத்திருப்பவரும் , आदिकारणं - முதற்காரணமாக  
  இருப்பவரும், स्यामकायं  - கருப்பான உடலுள்ளவரும், आदिदेव  -முதலாவது   

தேவனும் अक्षरं  - நாசமில்லாதவரும் , निरामयं - பிணியில்லாதவரும் 

भीमविक्रमं -பயங்கரமான பராக்ரமமுள்ளவரும் , प्रभुं  - ஸ்வாமியும் 

विचित्र  ताण्डवप्रियं - ஆச்சர்யமான தாண்டவத்தில்  ப்ரீதி உள்ளவரும் ,

 काशिकापुराधि  नाथ - காசிமாநகரின்  அதிபதியான , कालभैरवं -

காலபைரவரை , बजे - பஜிக்கிறேன் .


    கைகளில் சூலம்,  டங்கம் , பாசம் , தண்டம்  இந்த ஆயுதங்களை

வைத்திருப்பவர் .எல்லாவற்றிற்கும்  மூல காரணம் .  உடல் வெளுப்பாக     
இருந்தபோதிலும் கழுத்திலுள்ள  விஷத்தால் கருப்பாகவும் 

தெரிகிறது .முதலாவது தேவன்,  நாசமில்லாதவர், வியாதி  - 

துன்பம்  ஒன்றும் இல்லாதவர் . துஷ்டர்களுக்கு பயத்தைத் தரும் 

பராக்ரமுள்ளவர் . எல்லோரும் ஆச்சர்யப்படும்படி  பலவித 

தாண்டவம் செய்வதில் ப்ரீதி உள்ளவர் .இந்த காசி நகரத்தலைவனான

கால  பைரவரை  பஜிக்கிறேன். 


Kalabhairavar is armed with trishul, Chisel like weapon ( dankam ) pasam & stick.

All came from him.Even though his body complexion is white,looks likes the dark color of 

poison in the throat. Foremost Deva (God).  None could destroy Him. He is free from diseases

suffered by all living beings & sorrows.He is so powerful, creating fear among bad persons.  

He  is such a wonderful cosmic dancer .I worship this chieftain of city of Kasi.


இந்த சுலோகத்தில் " டங்கம் "( உளி ) என்ற ஆயுதம்(கருவி) முக்கியமானதை நினைவிற்கு கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள "சப்த விடங்கர்" ஸ்தலங்களைக்  குறிப்பிடுகிறேன் விடங்கர் என்றால் உளி கொண்டு செதுக்கப் படாதது என்று பொருள் .திருவாரூர் தியாகராஜர், திருநள்ளாறு( சனைச்சரன் கோவில் - காரைக்கால் அருகில், நாகப்பட்டிணம்(  திருநாகைக்காரோணம் ) திருக்குவளை ( திருக்கோளிலி),வேதாரண்யம் (திருமறைக்காடு ),திருவாய்மூர் மற்றும் திருக்காரவாசல், இத்தலங்களில் ஸ்வாமி தியகேசருக்கு அபிஷேகம் செய்வது என்பது அவரது அம்சமாக உள்ள விடங்கர் எனப்படும் ஸ்படிக அல்லது மரகத லிங்கக்களுக்கு தான். இந்த விடங்கர் லிங்கங்களை வெளியில் வைக்காமல்  தனியாக safety locker இல் வைத்திருப்பார்கள். அபிஷேகம் செய்ய விரும்பும்  பக்தர்கள் தனியாக பணம் செலுத்தி காணலாம் .இவை தேவேந்திரன் பூஜை செய்தது.   தனக்கு தேவாசுர யுத்தத்தில் உதவிசெய்து  தேவலோகத்தைக்  காப்பாற்றியதற்காக  தேவேந்திரன் பூலோக சக்ரவர்த்தி முசுகுந்த சோழனுக்கு   பரிசாகக் கொடுத்தவை .இவற்றைப் பற்றி பின்னர்எழுதுகிறேன்.
  








                           Photo courtesy - TN temple Tamilnadu all Hindu temples,













Comments