अट्ठहासभिन्नपद्म जाण्ड कोशसंततिं
दृष्टिपात नष्टपाप जालमुग्र शासनम् |
अष्टसिध्दि दायकं कपालमालिकाधरं
काशिकापुराधिनाथ कालभैरवं भजे ||
அட்டஹாஸ பிந்ந பத்மஜாண்ட கோஸந்ததிம்
த்ருஷ்டிபாத நஷ்ட பாபஜால முக்ர ஸாஸநம் |
அஷ்ட ஸித்தி தாயகம் கபாலமாலிகா தரம்
காஸிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||
अट्ठहास=உரத்த சிரிப்பினால் , भिन्न = பிளக்கப்பட்ட , पद्मजाण्ड कोश
सन्ततिं = மொட்டுப்போன்ற ப்ரஹ்மாண்டங்களின் கூட்டங்களை
உடையவரும், दृष्टिपात = பார்வையைச் செலுத்துவதால் , नष्ट =
அழிந்துபோகும் , पापजालं =பாபக்கூட்டத்தை உடையவரும்
अग्रशासनं = கடுமையான உத்தரவுகளை உடையவரும் ,
अष्टसिद्धि दायकं = எட்டு சித்திகளையும் தருபவரும்,कपालमालिकाधरं =
மண்டையோட்டு மாலையைத் தரித்தவருமான, काशिकापुराधिनाथ =
காசீ நகராதிபதியான , कालभैरवं = காலபைரவரை, भजे =
பஜிக்கிறேன்.
இவர் செய்யும் அட்டஹாஸத்தின் பேரொலியால் ப்ரஹ்மாண்டங்கள்
எல்லாம் பிளக்கப் பட்டு விடுகின்றன. இவருடைய கடாக்ஷம்
விழுந்தால் எல்லா பாபங்களும் அழிந்து விடும் . இவருடைய
கடுமையான உத்தரவை யாரும் மீற முடியாது. பக்தர்களுக்கு
அணிமா முதலான எட்டு ஸித்திகளையும் தருபவர் .
எத்தனையோ ப்ரஹ்மாக்களின் மண்டையோட்டுகளை மாலையாக
அணிந்திருக்கிறார் . இந்த காசிபுரத்தலைவனான கால பைரவரை
பஜிக்கிறேன் .
Many planets are torn apart into pieces by his louder laughing noise. All the sins of people are
wiped out by His mere look. None can overlook his stern commands. He blesses his devotees
with special yogic boons ( like walking in the ocean, flying like a bird, taking a desired form
either tiny or very big one, appearing in many places at the same time) of eight kind. He is
wearing the skulls of God of creation as a garland after their end. I worship this chieftain of
this city of Kasi.
Kalabhairavar - Adhiyamankottai -Dharmapuri ( Tamil Nadu ).Photo courtesy.TN temple organisation.
Comments
Post a Comment