|| शिवभुज ड.ग् म् ||
गलद्दानगण्डं मिलद्भृङ्गषण्डं
चलच्चारुशुण्डं जगत्त्राणशौण्डम् ।
कनद्दन्तकाण्डं विपद्भङ्गचण्डं
शिवप्रेमपिण्डं भजे वक्रतुण्डम् ॥ १ ॥
கலத்தானகண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம்
சலச்சாரு ஸு ண்டம் ஜகத்ராண ஸௌண்டம்
கனத்தந்தகாண்டம் விபத்பங்க சண்டம்
ஸிவப்ரேம பிண்டம் பஜே வக்ர துண்டம் .
சிவனைத் துதிக்கும் 40 சுலோகங்கள் இந்த ஸ்தோத்திரம் புஜங்க
விருத்தத்தில் அமைந்துள்ளது. சிவன் பாம்புகளைத் தமக்கு மிகவும்
உகந்த அணிகளாகக் கொண்டிருப்பதால் புஜங்க ப்ரயாத
விருத்தத்தில் அமைக்கப்பட்ட இந்த ஸ்தோத்திரம் அவருக்கு
பிரியத்தைக் கொடுக்கும் என்று கடைசி சுலோகத்தில் ஸ்ரீ ஆதி
சங்கரர் காரணம் கூறுகிறார்.இதில் மார்கண்டேயனுக்கு அருள்
செய்த காலகாலனிடம் ம்ருத்யு பயம் விலக வேண்டுகிறார்.
குற்றம் செய்தவருக்கும் அனுக்ரஹம் செய்திருப்பதைக்காட்டி
தன் குற்றங்களையும் மன்னிக்கும்படி பிரார்த்திக்கிறார் .
அம்பிகையுடன் சேர்ந்த சிவமூர்த்தியைத் தியானிக்கிறார் .
சிவனை பரப்ரஹ்மமாக முதலிலும் கடைசியிலும் கூறுகிறார் .
வண்டுகளின் கூட்டத்தையுடையவரும் चलच्चारुशुण्डं =
அசைகின்ற அழகிய துதிக்கையையுடையவரும்
जगत्त्राणशौण्डम् = உலகைக் காப்பதில் திறனுள்ளவரும்
कनद्दन्तकाण्डं = பிரகாசிக்கின்ற தந்தங்களுடன் கூடியவரும்
विपद्भङ्गचण्डं= ஆபத்துகளைப் போக்குவதில் சாமர்த்தியமுடையவரும்,शिवप्रेमपिण्डं =
பரமேச்வரரின் அன்பிற்கு பாத்திரமானவருமான
वक्रतुण्डम् = கணபதியைத் भजे = துதிக்கிறேன் .
ஸிவ புஜங்கம் என்ற இந்த துதி நூலை ஆரம்பிப்பதற்கு
முன் ஆச்சார்யர் எல்லா இடையூறுகளையும் அகற்றவல்ல
கணபதியை முதலில் துதிக்கிறார்.அவர் யானை
முகத்தையுடையவர்.அவரது கன்னத்திலிருந்து மத ஜலம்
பெருகுவதால் வண்டுக்கூட்டம் அவரது முகத்தைச் சுற்றிலும்
மொய்க்கின்றது. அவைகளை ஓட்டுவதற்காக அவர் தனது
துதிக்கையை ஆட்டுவது மிகவும் மனோகரமாக இருக்கிறது .
அவரது முகத்தில்உள்ள தந்தங்கள் மிகுந்த ஒளியுள்ளவை
களாதலால் மனதைக் கவருகின்றன.இவ்வாறு மிக்க
மதத்துடனுடனும் வலிவுடனும் கூடிய கணேசன் பகைவர்களின் கூட்டத்தை நாசம் செய்வதால் பயங்கரமாகவும் தோற்றமளிக்கிறார் .ஒரே ஸமயத்தில்
அவர் பயங்கரமாகவும் மனோஹரமாகவும் காட்சியளிக்கிறார் .அவரைவணங்குவதால்
எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
Photo courtesy :Kumudam Jyodhidam with thanks to Sri.Sringeri Peetham for Sanskrit script.
Comments
Post a Comment