Shiva Bhujangam slokam 6

       
                                                    || शिव  भुजङ्गम्  ||


                                स्वसेवासमायातदेवासुरेन्द्रा-
                              नमन्मौलिमन्दारमालाभिषक्तम् ।
                         नमस्यामि शंभो पदांभोरुहं ते
                               भवांभोधिपोतं भवानीविभाव्यम् ॥ ६ ॥  

                          ஸ்வஸேவாஸமாயாததேவாஸுரேந்த்ரா-
                             நமன்மௌலிமந்தாரமாலாபிஷக்தம் | 
                         நமஸ்யாமி ஸம்போ பதாம்போருஹம் தே
                             பவாம்போதிபோதம் பவானீவிபாவ்யம் ||  6 || 
                         
 शम्बो = ஹே பரமேச்வரா  स्वसेवा = தனக்கு ஸேவை செய்வதற்காக  समायात =          வந்த देवासुरेन्द्र = தேவேந்திரன் ,அசுரேந்திரன் இவர்களுடைய  आनमन्   = வணங்குகின்ற मौलिमन्दारमाला = தலைகளிலிருந்து விழும் மந்தார மலர்களின்
மாலைகளால்  = अभिशिक्तम् = அபிஷேகம் செய்யப்பட்டதும் भवाभ्भोधि   = பிறவி
என்ற பெருங்கடலைக் கடப்பதற்குச் சாதனமான पोतम् = படகாயும்
भावानीविभाव्यम् = பார்வதீ  தேவியால்  போற்றத்தக்கதுமான ते  = உம்முடைய
पदाम्भोरूहं =  திருவடித்தாமரையை नमस्यामि = பூஜிக்கின்றேன்.

 சிவபெருமானுடுடைய பாதபத்மம் மிகவும் பெருமை வாய்ந்தது . அதைத்
தேவர்களும் அசுரர்களும் ஸேவிக்கின்றனர்.   அமராதிபனும் அஸுரச்சக்ரவர்த்தியும் இவரது பாதத்தில் வணங்கும் பொழுது அவர்களுடைய மகுண்டங்களில் விளங்கும் மந்தார மாலைகள் இதன் மேல் விழுந்து இதனை அலங்கரிக்கின்றன.  பிறவியென்ற ஓர்  பெருங்கடலைத் தாண்டுவதற்கு இது ஓர் தோணியாக விளங்குகின்றது. பரமேச்வரனின் பத்னியாகிய பார்வதீ தேவியும் இதையே தியானம்  செய்கின்றாள் . இந்த
பாதபத்மத்தை  நாம் எப்பொழுதும் பூஜித்தல் வேண்டும் .இதனால்
நமக்கு நன்மையேஏற்படும் . இதை  शम्भो  என்ற பதம்நன்கு  காட்டுகின்றது .





                                 

Thanks to DharmaChakram &Kumudam Jodhidam magazines for the photos.Thanks to Sri. Sringeri Saradha Peetham for the Sanskrit & Tamil text.

Comments