महादेव देवेश देवादिदेव स्मरारे पुरारे यमारे हरेति ।
ब्रुवाणः स्मरिष्यामि भक्त्या भवनतं ततो मे दयाशील देव प्रसीद ॥
மஹாதேவ தேவேஸ தேவாதி தேவ
ஸ்மராரே புராரே யமாரே ஹரேதி |
ப்ருவாண: ஸ்மரிஷ்யாமி பக்த்யா பவந்தம்
ததோ மே தயாசீல தேவ ப்ரஸீத ||
महादेव = மஹாதேவனே देवेश = தேவர்களுக்குத் தலைவனே देवादिदेव =
தேவர்களுக்கெல்லாம் முதல் தேவரே स्मरारे =மன்மதனை எரித்தவனே
पुरारे = புரன் என்ற அரக்கனை மாய்த்தவனே यमारे =யமனை
அடக்கியவனே हर = பரமேஸ்வரனே इति = என்று சொல்லிக்கொண்டு
भक्त्या =பக்தியுடன் உம்மை स्मरिष्यामि =த்யானம் செய்கிறேன் तत :
ஆகையால் दयाशील = ஹே கருணா ஸ்வரூபியே देव = தேவனே मे = எனக்கு
प्रसीद = அருள் புரிவாயாக .
பரமேச்வரனுடைய பெருமைகள் இங்கு எடுத்து சொல்லப் படுகின்றது .
பலம் மிகுந்த தாராகா சூரனால் தேவர்களுக்கு இன்னல் வந்த போது
தேவேந்திரன் ,பிரம்மாவிடம் சென்று கேட்ட போது சிவன் மட்டுமே
அவர்களைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார். தியானத்திலிருந்த
சிவபிரான் மீது , மன்மதனை விட்டு மலரம்பு பாணத்தை ஏவச் செய்தான் .
அப்பொழுது சிவனின் அருகில் அன்னை பார்வதி தேவியும் இருந்தாள்.
தியானம் கலைந்த சிவபிரான் மன்மதனைக் கண்டதும் அவன் மீது
சினந்து நெற்றிக் கண்ணைத் திறந்தார் .மன்மதன் எரிந்து
சாம்பலானான். ( திரு முருகனுடைய அவதாரம் - மற்றும் தாரகனை
வதம் செய்தது ).மற்றும் ஒரு சமயம் திரிபுரன் என்ற அரக்கன் தங்கம்,
வெள்ளி , இரும்பால் ஆன மூன்று கோட்டைகளைக் ( பறந்து செல்வன )
கொண்டு எல்லா உலகங்களுக்கும் தீங்கு செய்தான் . அவனை நோக்கி
சிரித்தே , அழித்து விட்டார் .( முப்புரம் எரி செய்த அச்சிவன் - கைத்தல
நிறை கனி என்ற திருப்புகழ் ).தன் பக்தனான மார்கண்டேயனைக்
காப்பாற்ற , காலனையே காலால் உதைத்து சம்ஹாரம் செய்தவன்.
இவ்வாறாக பரமேச்வரனுடைய பெருமைகளை மனதில்
ஸ்மரித்துக் கொண்டு அவரது திருநாமங்களை யார் பக்தியுடன்
கூறுகின்றார்களோ , அவர்களுக்கு கருணாமூர்த்தியான அவர் பரிவு
காட்டி அவர்களை எல்லாவித ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றுகிறார் .
Sri Bhaktajaneswarar Goddess Manonmani
Thirunavalur Shiva temple
Vilupuram Dt
12 kms from Panruti towards Ulundurpet route
Vilupuram Dt
12 kms from Panruti towards Ulundurpet route
Birth place of Sri Sundaramoorthy Nayanar
Photo courtesy :Dinamalar magazine
Comments
Post a Comment