Shiva bhujangam slokam 18





                                      भवान्यै भवायापि मात्रे च पित्रे
                              मृडान्यै मृडायाप्यघघ्न्यै मखघ्ने ।
                          शिवाङ्ग्यै शिवाङ्गाय कुर्मः शिवायै
                             शिवायांबिकायै नमस्त्र्यंबकाय ॥ १८ 


            பவான்யை பவாயாபி மாத்ரே ச பித்ரே
    ம்ருடான்யை ம்ருடாயாப்யகக்ன்யை மகக்னே | 
     ஸிவாங்க்யை ஸிவாங்காய குர்ம​: ஸிவாயை
       ஸிவாயாம்பிகாயை நமஸ்த்ர்யம்பகாய ||  18 ||     

 भवान्यै= பரமேச்வரனுடைய   பத்னியாயும்       मात्रे= சகல 
லோகங்களுக்கும் தாயாயும் मृडान्यै = மகிழ்ச்சியைத் 
தருகின்றவளாகவும் अंध्य्घ्नयै = பாபங்களைப் 
போக்குகின்றவளாயும்  शिवाङ्ग =  மங்களகரமான 
அங்கங்களையுடையவளாயும் शिवायै = மங்களத்தைத் 
தரக்கூடியவளாயும் இருக்கின்ற अम्बिकायै =
அம்பிகைக்கும் भवाय = ஸ்வயம்பூவாகவும்   पित्रे = ஸகல
லோகங்களுக்கும்  தந்தையாயும் मृडाय =  சுகத்தைத் 
தருகின்றவனும்  मखघ्ने = தக்ஷனுடைய  யாகத்தை 
அழித்தவனாயும் शिवाङ्गाय = மங்களகரமான 
அங்கங்களையுடையவனும் त्रयम्बकाय =  மூன்று 
 கண்களையுடையவனுமான शिवाय = சிவபெருமானுக்கும் 
नम : कुर्म = நமஸ்காரம் செய்கின்றோம் .

 இந்த சுலோகத்தில் யதாஸங்க்யம் என்ற   அணியின்
மூலமாக உலகங்களுக்கெல்லாம் தாய் 
தந்தையர்களாக விளங்கும்  பார்வதீ பரமேச்வரனுடைய 
ரூபம் வர்ணிக்கப்பட்டுள்ளது.பார்வதீ தேவி 
லோக மாதா . பரமேச்வரனுடைய தர்ம பத்னீ .அவளே 
தன்னுடைய குழந்தைகளாகிய ஸகல  ஜீவ ராசிகளுக்கும் 
சுகத்தையளிப்பவள். பாபங்களனைத்தையும் 
களைகின்றவள் . அழகிய அங்கங்கள் வாய்ந்தவள் . 
நாம் அனைவரும் சுகம் பெற அந்த பராசக்தியை
வணங்குகின்றோம்.  

        அதே போலவே பரமேச்வரனும் மிகுந்த சக்தியுள்ளவன் , ஸ்வயம்பூ , அவனே உலகைப் படைத்தவன்.ஆதலால்   
அவனே உலகின்  தந்தை. ஸகல ஜீவர்களுக்கும் அவனே  
சுகத்தைத் தருகின்றான் .தக்ஷனுடைய யாகத்தை 
நாசம் செய்து அவனுடைய  கர்வத்தைப் போக்கியவன் 
அழகிய அங்கங்களையுடையவன். மூன்று கண்களையுடையவன் .நாம் அனைவரும் நலம் பெற 
அவனை வழிபடுகின்றோம்.  
slokam courtesy: Sri  Sringeri  Sarada Peetham.Photos with thanks to Sri veeramani Veerasami.

Comments