Thiruvannamalai Deepam 2016 | karthigai Deepam 2016, why is karthigai celebrated

Karthigai Deepam falls on the Krithigai star on a Full moon day in the Tamil month of Karthigai in December. God  Shiva appeared before God Vishnu & Brahma as a pillar of fire in this particular day. 
You would have noticed "Lingodhbavar/ Lingodhbava " when  coming around the corridor of Shiva temple. When there was an argument , who was supreme between Vishnu & Brahma, they found  great light standing like a pillar. While Brahma took the form of a swan to reach out the top of the fire,Vishnu took the form of Varaha(Pig ) to reach the bottom. Both could not succeed in finding out the top & bottom.Then they realized. It is God Shiva Himself standing like a pillar of Fire. 

Out of five elements of Power,Tiruvannamalai represents "Fire".The mountain  standing tall in the background of the big temple itself is worshiped  as Shiva Linga, Many saints like Arunagirinathar ,Sheshadri Swamigal,Sri Ramana Maha Rishi & recently Yogi Ramsuratkumar , have done penance in this Holy place.




Mother Uma Devi has done penance in this place as per the instruction of Lord Shiva. She has performed pradhakshina around this Mountain & Shiva appeared before Her on  a Karthigai Full Moon Day,granted her ,His left half.From then on Mother Uma Devi & Lord Shiva is called "Ardhanareeswara". Ardhanareeswara is the main deity at at Thiruchengode temple  nearby Salem & Namakkal,famous temple praised by Thirugnanasambandar in Devaram Hymn. It is said that people were affected by a virus fever & unable to cure ,on learning this Sambandhar praised Ardhanaareeswara in his Devaram hymn & cured the strange disease. 
Lingodhbavar
God Shiva destroyed three demons by simply smiling at them on one of  this Full  Moon Day.

Mahabali king used to light lamps & worship Lord Shiva in many temples.God Shiva gave darshan to the king as a great light form.This also occurred on a Karthigai Full moon day.Devas from Heaven came to Tiruvannamalai to witness this, they could not bear the heat radiated from the great fire like appearance.To reduce the heat radiation ,they offered rice flakes,fried rice flakes to Shiva & later had the dharshan. Based on this now we are offering this rice flakes on this Deepa Day.

  
The white rice flakes represents pure ,selfless love towards God. Jaggery is mixed with this rice flake & offered to Shiva.This Shows Jeevatma  enjoying Divine Grace (Paramatma),Shivanandha.

The word "Annamalai"means unapproachable mountain In Tamil.

அண்ணாமலை என்ற சொல்லுக்கு அணுக (நெருங்க ) முடியாத மலை என்று பொருள்.

சிவபெருமான்  திருவண்ணாமலையில்தான் ப்ரமாவிற்கும் ,விஷ்ணுவுக்கும் 
ஓர் அக்னி ஸ்தம்பமாக காட்சியளித்தார்.இவ்வடிவமே லிங்கோத்பவர்  என்று அழைக்கப்படுகிறது .நாம் சிவன் கோவிலில் பிரகாரம் வலம் வருகையில்  மூலஸ்தானத்திற்கு பின்புறம் லிங்கோத்பவ மூர்த்தியை 
தரிஸிக்கலாம்.ஒரு  தூணின் நெடுக்கு வெட்டுத் தோற்றம் .அதன் மேல் புறம் 
அன்னப் பறவையும் அடிப்புறம் ஒரு பன்றியின் உருவையும் காணலாம் .ப்ரம்மாவிற்கும் ,விஷ்ணுவிற்கும் தங்களுக்கிடையில் யார் பெரியவர் என்ற வினா வந்த போது அவர்களுக்கெதிரே ஒரு ஜோதி வடிவம் தோன்றியது .அதன் முடியைக் கண்டு பிடிக்க பிரம்மா அன்னப் பறவையாகவும் ,விஷ்ணு  அடியைக் கண்டு பிடிக்க வராஹமாகவும்  முயன்றனர் .அன்னம் எவ்வளவு முயன்றும் முடியைக் கண்டு பிடிக்க முடியவில்லை .அது போலவே 
பாதாளம் நீண்டு கொண்டே போனது .இருவரும் களைத்து நின்றபோது சிவன் அவ்விருவருக்கும் காட்சி கொடுத்தார் .அந்த  நன்னாளைத்  தான் கார்த்திகை தீப திருவிழாவாக நாம் கொண்டாடி வருகிறோம். நம்மிடையே  "நான்" தான் இதனைச் செய்தேன். நான் எவ்வளவு  பெரியவன்.மற்றவர்களை விட நான்  தான் உயர்ந்தவன் .எனக்குதான்   முதல்  மரியாதை  செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்.மஹா பாரதம் போர் முடிந்த பின்னர் போர்க்களத்தில் அர்ஜுனனும் ,அவனுக்கு சாரதியாக இருந்த கிருஷ்ணனும் தேரில்  இருந்தனர் .முறைப்பபடி,முதலில் தேரோட்டியும்  அதன் பிறகே அரசனும்  தேரிலிருந்து  கீழே இறங்க  வேண்டும்.எப்படி கார் ஓட்டுநர்  கார்   நின்றதும்  மு தலில் இறங்கி தன் ஏஜமானனுக்கு கார்  கதவைத் திறந்து விடுகிறார்களோ , அது போன்று. கிருஷ்ணன் , அர்ஜுனா  நீ  தேரிலிருந்து முதலில் இறங்கு என்று கூறினார்.என்ன  கிருஷ்ணா  நீ  மரபை  மீறுகிறாயே.நீ தானே முதலில்  இறங்கி  என்னை இறக்கி விடவேண்டும் என்றான் அர்ஜுனன்   .நீ முதலில்  இறங்கு என்றான் கிருஷ்ணன். சற்று ஆச்சர்யத்துடன் அர்ஜுனன் கீழே இறங்கினான்.  தேரினிலிருந்து தள்ளி நில்  என்றான் கிருஷ்ணன். பணிந்தான் குந்தி  மைந்தன். உடன் தேரிலிருந்து  குதித்து அர்ஜுனன்  பக்கம் கிருஷ்ணன் வந்து நின்றான் .தேர் திடீரென்று தீ பிடித்துஎரிந்தது. இப்போது அர்ஜுனனைப் பார்த்தான் கிருஷ்ணன்.    தன்னைக்  காப்பாற்றியதாக  நன்றியுணர்வுடன்  கிருஷ்ணனைப்  பார்த்தான். தன்னுடைய வீரத்தால் பகைவர்களை வென்று  விட்டோம் என்றஉணர்வு அர்ஜுனனிடம் இருந்தது. இப்போது கிருஷ்ணன் கூறினான் ,அர்ஜூனா ,பீழ்மர், கர்ணன் ,துரோணாச்சாரியார் போன்றவர்கள் விட்ட அஸ்திரத்தில் உள்ள மந்திர சக்தியெல்லாம் நான் தடுத்தி நிறுத்தியிருந்தேன், அவையெல்லாம் நீ கீழே இறங்கிய பின் தேரை  எரித்து  விட்டன .  நீ செத்த பாம்பைதான் அடித்தாய் . நீ என்னிடம் இருந்த ஒரு கருவி மாத்திரம்  தான் .அனைத்தும் என்னுடைய (இறைவனுடுடைய )அருளாலேயே நடை  பெற்றது  என்பதை புரிந்து கொள் .

   இதனையே ஸ்ரீ ரமண  மஹ ரிஷிகள் அந்த "நான் " என்பதை யார் என்று விசாரம் செய்து வாருங்கள் .முடிவில் நீங்களும் அறியலாம் என்று கூறுகின்றார்  .

எண்ணற்ற மகான்கள் இங்கே தவம் செய்து முக்தி அடைந்துள்ளனர். அருணகிரிநாதர் ,சேஷாத்திரி சுவாமிகள் ரமண பகவான் ,அருணகிரியாரின் திருப்புகழ் பாடல்களை தமிழகெங்கும் பரப்பிய சச்சிதானந்த சுவாமிகள் என்னும் வள்ளிமலை சுவாமிகள்,மற்றும்  விசிறி சாமியார் என்னும் யோகி ராம்சூரத் குமார் முதலியோர் இங்கே வந்து தவம் 
செயதுள்ளனர். 

பஞ்சபூத  திருத்தலங்களில் அக்னி  ஸ்தலமான இந்த  ஊர்   பெயர் வேறு ,கோயில் வேறல்ல என்று ஒருங்கிணைந்தது .இதன் தல வரலாற்றினை
சைவ எல்லப்ப நாவலர் என்ற புலவர் "அருணாச்சல புராணம் "என்ற புத்தகத்தில் இதன் பெருமையையும் ,கிரிவலம் வருவதன் பயனையும் ,இங்கே இருந்த குஹை நமச்சிவாயர் ,குரு நமச்சிவாயர் (ரமணர் காலத்திற்கு முற்பட்டவர்கள் ) மஹான்களின் வரலாற்றையும் ,நவகோள்களின் நாயகனான சூரியன்,முற்கால மன்னர்கள்   முதலானோர் எப்படி இங்கு வந்து வழிபட்டனர் என்பதை மிக அழகாக  கவிதைகளாலும்  ,உரைநடையாலும் விளக்கியுள்ளார். இது  கி.பி 17ம் நூற்றாண்டில் வெளி வந்த நூல் .இதனை திரு.இராபர்ட்  பட்லர் ( Mr.Robert Butler) என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் . வல்லாள மஹாராஜா என்ற மன்னரையும் பற்றி இதில் வருகிறது .

 இங்குள்ள முருகப்பெருமான் அருளினால் அருணகிரிநாதர் சந்தத் தமிழ் 
பாக்களால் திருப்புகழ்,கந்தர்  அலங்காரம் ,கந்தர் அநுபூதி ,வேல் வகுப்பு போன்ற கவிதைகளைப் பாடினார். சைவம்   பெரியதா அல்லது வைணவமா
என்ற மதப் போராட்டம் நடந்த 15ம் நூற்றாண்டு காலம் அது .முருகனை நடுநாயகமாக வைத்து ,சக்தி , சிவம் ,விஷ்ணு ,விநாயகர் ,ஆகிய அறு சமய வழிபாட்டுக்கு வித்திட்டவர். வைஷ்ணவர்கள் விஷ்ணுவைத் தவிர  வேறு கடவுள் பாடலைப் பாட மாட்டார்கள் .ஆனால் சிவசக்தி மைந்தனான முருகன் திருப்புகழ் பாடல்களை ஏற்றுக் கொண்டு இன்றும் பாடி வருகின்றனர் .ஏனெனில் திருப்புகழில் ராமாவதாரம், ராமாயணவரலாறு.  சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் ,கிருஷ்ணாவதாரம் ,மஹா பாரதம் ,விநாயகர் புகழ்  இவையெல்லாமே வந்து விடுகின்றன.தற்கால சினிமா மோகத்தினால் வரும்  தீமையை  திருப்புகழ் கற்றால் போய்விடும் .இதை பெற்றோர்கள் உணர்ந்தால் பிள்ளைகள் நல் வழியில் செல்லலாம்.திருவண்ணாமலையையும் ,கார்த்திகை தீபத்தையும் பற்றி  வெறும் எழுத்தில் எழுத முடியாது.மாணிக்கவாசகரும் ஆதியும்  
அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதி என்று மார்கழி திருவெம்பாவையில் பாடிச் சென்றுள்ளார். பின் வந்த  வள்ளலாரும் இறைவனை உருவ வடிவில் 
ஆரம்பித்து உயர் ஞான நிலையடைந்த பின் ஜோதி ரூபமாகவே எல்லோரையும் வழிபடுமாறு கூறியுள்ளார் .தற்காலத்தில் ஐயப்ப வழிபாடும் மகர சங்கராந்தியில் ஜோதி தர்சனமாகவே முடிகிறது.

Photos with thanks to Dinamalar magazine & kumudam jodhidam  & Smt Easwari Kamalabaskaran.Also my sincere thanks to Sri.Kamalathmanandha swamiji - Sri Ramakrishna mutt Madurai

Comments