Sun moves slowly from north to south(dakshinayana) & from south to north ( utharayana ) taking six months for each process.Our saints discovered this astronomical fact thousands of years ago when there was no scientific development in the world & shown to our people. They disclosed these facts. . Some rituals were advised by them during this auspicious day, beginning of climate change from winter to summer . They asked to recite slokas before bathing, related to Sun God They advised people to hold 7எருக்கு இலை , அட்சதை ,அருகம் புல் , சிறிது கோமியம் அல்லது பசுஞ்சாணம் women should use turmeric powder instead of holy rice( atchatha), pouring the water over the head while starting bathing.
शप्तशप्ति प्रिये ! देवि ! शप्त लोकैक पूजिते ! ।
शप्त जन्मार्ज्जितं पापं हर शप्तमि ! शत्वरम् ॥
यत् यत् कर्मकृतं पापं मया शप्तशु जन्मशु ।
तन्मे राेगञ्च शाेकञ्च माकरी हन्तु शप्तमी ! ॥
नौमि शप्तमि ! देवि ! त्वां शप्त लोकैक मातरम् ।
शप्ताऽर्क्क पत्र श्नानेन मम पापं व्यपाेहय ॥
1. ஸப்த ஸப்திப்ரியே ! தேவி ! ஸப்த லோகைக பூஜிதே !
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ! ஸத்வரம்
2. யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச ஸோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ
3.நௌமி ஸப்தமி ! தேவி ! த்வாம் ஸப்த லோகைக மாதரம்
ஸப்தா ( அ ) ர்க்க பத்ர ஸ்நானேன மம பயம் வ்யபோஹய !
மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருள் :
1. ஏழு குதிரைகள் பூட்டிய தேருடன்கூடிய ஸூர்யனின் ப்ரியமான தேவியே . ஏழு உலகங்களாலும் பூஜிக்க படுபவளே. ஹே ஸப்தமி தேவி ! ஏழு ஜன்மங்களில் நான் சேகரித்துள்ள பாபங்களை விரைவாக அபஹரித்துக்கொள். 2. மகர - தை மாத ஸப்தமியே ! என்னால் முன் ஏழு ஜன்மங்களிலும் செய்யப்பட்ட - ( ஏழு ஜன்மங்கள் என்பது)
1.முன்பிறவியில் , 2.இந்த பிறவியில் , 3. மனதால் , 4.உடலால் , 5.வாக்கால் ,
6. அறிந்தும் , 7.அறியாமலும் செய்தவை என ஏழு விதமான பாபங்களால்
ஏற்பட்ட , ஏற்படப் போகும் நோய்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும்என்னை விடுவிப்பாயாக .
3. ஹே ஸப்தமி தேவியே ! ஏழுலகங்களுக்கும் தாயான உன்னை வணங்குகிறேன் .
ஏழு எருக்க இலைகளால் நான் செய்யும் ஸ்நானத்தால் எனது பாவத்தைப் போக்கி அருள் புரிவாயாக .
ஸ்நானம் செய்த பின் ஆடை உடுத்தி " ரத ஸப்தமீ ஸ்நானாங்க ம் அர்க்க்ய ப்ரதானம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் கூறிக் கொண்டு
शप्तशप्ति रथारूढ ! शप्त लोकैक प्रकाशक ! ।
दिवाकर ! गृहाणाऽर्घ्यं शप्तयां ज्याेतिषां पते !
दिवाकराय नमः इदमर्घ्यम् । इदमर्घ्यम् । इदमर्घ्यम् ।
ஸப்த ஸப்தி ரதா ரூட ! ஸப்த லோகைக பிரகாஸக ! திவாகர !
दिवाकर ! गृहाणाऽर्घ्यं शप्तयां ज्याेतिषां पते !
दिवाकराय नमः इदमर्घ्यम् । इदमर्घ्यम् । इदमर्घ्यम् ।
ஸப்த ஸப்தி ரதா ரூட ! ஸப்த லோகைக பிரகாஸக ! திவாகர !
க் ருஹாணார்க்யம் ஸப்தம்யாம் ஜ்யோதிஷாம் பதே !
திவாகராய நம : இத மர்க்க்யம், இத மர்க்க்யம், இத மர்க்க்யம்
ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் அமர்ந்திருப்பவரே ! ஏழு உலகங்களுக்கும் ஒளி அளிப்பவரே ! ஹே திவாகர ! நட்சத்திர மண்டலங்களுக்குத் தலைவரே ! ரத ஸப்தமியன்று என்னால் தரப்படும் இந்த அர்க்க்ய (ஜல ) த்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று சூர்யதேவர்க்கு தூய்மையான தீர்த்தத்தால் மூன்று முறை அர்க்கியம் இட வேண்டும்
( ஒரு தாமிர சொம்பினாலோ அல்லது பஞ்ச பாத்திரத்தினாலோ தீர்த்தத்தை சூரியனை நோக்கி நின்று கொண்டு கீழே விட வேண்டும்).
Photo courtesy : pintrest
Photo courtesy : pintrest
Comments
Post a Comment