Posted by
Learn kolam
on
- Get link
- X
- Other Apps
Learn Kolam2 years ago
New parliament inaguration by our Hon. Prime minister Sri Narendhra Modi - 28.5.2023* திருக்குறள் * *ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும், தேர்ந்து செய்வதே முறை . 541* *குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆராய்ந்து விருப்பு வெறுப்பின்றி நடுவு நிலைமை தவறாமல் வழங்க படுவதே நீதியாகும் .* *வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னன் * *கோல் நோக்கி வாழுங் குடி - 542* *உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை * *நம்பி வாழ்கின்றன . குடிமக்கள் எல்லாம் ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை ( செங்கோலை ) எதிர் பார்த்தே வாழ்வார்கள் .* *அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் * *நின்றது மன்னவன் கோல் - 543* *அறவோர் ஞான நூல்களுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் இருந்து உலகத்தைக் காப்பது. மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்திலிருந்து 21 மடாதிபதிகளை புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு அழைத்து அவர்களிடமிருந்து நமது சேர,சோழ ,பாண்டிய மன்னர்களின் முற்கால மரபுப்படி "செங்கோலை " பெற்றுக் கொள்கிறார் . நமது தமிழ் கலாச்சாரத்தை மதித்து இவ்வாறு செய்தது மிக்க மகிழ்சசி அளிக்கிறது .நமது நாடு ஆகஸ்ட் 15 -1947 இல் அப்பொழுது பிரிட்டிஷ் கவர்னர் மௌண்ட்பாட்டனுக்கு பின் முதல் இந்திய governor genaral ஆக வந்த திரு .ராஜாஜி தமிழகத்தில் இருந்து செங்கோல் கொண்டுவரச்சொல்லி பதவி ஏற்றனர் . அதனையொட்டியே திரு மோடியும் செய்தது மிகவும் போற்றுதற்குரிய செயல் .
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment