Making rice floar dough, fillings for rice pie for Ganesh Chadhurthy

 



     






    விநாயகர் சதுர்த்திக்கு  கொழுக்கட்டை செய்ய readymade ஆக கடைகளில்

 வாங்கிக் கொள்ளலலாம். வீட்டிலேயே செய்வது எப்படி என்பதைப் பார் ப்போம் . மாவு பச்சரிசியை தண்ணீரில் நன்றாக 3 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடி கட்டி ஊறிய அரிசியை ஒரு மெல்லிய துணியில் இட்டு ஓர் அரை மணி நேரம் உலர வைக்கவும் (நிழலிலே).இந்த அரிசியை மிக்ஸியில் போட்டு நன்றாக நைசாக அரைத்து  அதனை சல்லடையில் நன்றாக சலித்து எடுத்துக் கொள்ளவும் . இட்லி தட்டில் சிறிது நல்லெண்ணெய் தடவி அதனை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும் (15 mts )

 அடுப்பில் வெண்ணீரை ஒரு spoon நல்லெண்ணெய் or நெய் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் .இந்த வெண்ணீரை வேக வைத்த மாவில் ஊற்றி நன்றாக கரண்டியால் கெட்டியாக வரும் வரை கிளறவும் . தகுந்த அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள் . தற்பொழுது கொழுக்கட்டை மாவு தயார்  


                                                                         


                                                    கொழுக்கட்டை  மாவு 



                                           மிக்ஸியில்    கடலை பருப்பு  அரைத்தல்                                                       

                                                                                


                                                                இனிப்பு பூரணம் 
                                                                                     


                                  ஆவியில் வேகவைத்த உளுந்து .  இட்லி குழியின் நடுவில்        இருப்பது  பெருங்காயம்  -    நீரில் கரைத்தது                                             
                                                                                   


                                                                                        



                                       உளுந்து பூரணத்துடன் தேங்காய்த்துருவல் 




இனிப்பு பூரணம் செய்ய தேவையானவை :

கடலை பருப்பு அரை கப் , தேங்காய்த் துருவல்  1 கப் , பொடித்த வெல்லம் 3/4  கப் , ஏலக்காய் 3.

கடலை பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து வேக வைத்து , மிக்ஸியில் சிறிது  கொரகொரப்பாக ( course grinding ) அரைத்து கொள்ளலாம் .or  மத்தினால் சிறிது கொள்ளவும் .பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்த கடலைப்பருப்பு,தேங்காய் ,வெல்லம் , ஏலக்காய் கடாயில் இவற்றை போட்டு 1/4 tumbler தண்ணீர் விட்டு கெட்டியாகும் வரை கிளறி இறக்கி வைத்து விடவும் .

உளுந்துபூரணம் :

ஒரு கப் குண்டு வெள்ளை உளுந்தை ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்  . தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் உளுந்தை போட்டு அதனுடன் 4 பச்சை மிளகாய் , சிறிது பெருங்காயம் ,தேவையான அளவு உப்பு ,ஒரு 25 ml நீர் விட்டு pulse mode இல் ஒன்று இரண்டாக அரைத்து கொள்ளவும் . அரைத்ததை இட்லி தட்டில் நிரப்பி ஆவியில் 15 நிமிடம் வேக வைக்கவும் .இதனை எடுத்து நன்றாக உதிர்த்து விட்டு , ஒரு கடாயில் 50 ml தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு , கறிவேப்பிலை  தாளித்து உதிர்த்த உளுந்து , ஒரு மூடி தேங்காய் துருவல் சேர்த்து 10 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும் .

இது தொடர்பான வீடியோ "making of pooranam- fillings for kozhukkattai " என்ற தலைப்பில் "learn kolam facebook page " இன்று பார்க்கவும் 

 

Comments